தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, அநாகரிகமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. எதோ டீ கடையில் நின்று அரசியல் பேசுவது போல் நாகரீகமற்ற பதிவுகளை டுவிட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அரசியலுக்கு வரமாட்டேன் என கூறி எனக்கு முன் பல சீனியர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என படம் போட்டு திடிரென்று திமுகவின் இளைஞரணி செயலாளர் ஆனார் உதயநிதி. ஸ்டாலினும் எனக்கு பின் வாரிசு யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என பேட்டி கொடுத்தார். திமுக என்றாலே பொய் சொல்வதுதானே. கலைஞர் முதல் தற்போது உள்ள உதயநிதி வரை.
2019 லோக்சபா தேர்தலுக்கு பின், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரானார். பதவி கிடைத்தத்திலிருந்து டுவிட்டரில் மட்டும் செயல்பட தொடங்கினார். அவரின் டுவீட்கள் அவ்வப்போது அவரது அப்பா ஸ்டாலின் போலவே சர்ச்சையாகும். அந்த வகையில் அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து, சமரச முயற்சிகள் குறித்து கிண்டலடித்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க., வெற்றிகரமாக முதல்வர் வேட்பாளரை புதனன்று அறிவித்துவிட்டது. இதை சற்றும் எதிர்பாராத திமுக அதிர்ச்சியடைந்தது.
மீண்டும் அ.தி.மு.க.,வில் பெரிய பிளவு ஏற்படும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் 2021 தேர்தல் மிகவும் போட்டியாக இருக்கும் எளிதில் திமுக வெற்றி பெற முடியாது. அதிமுகவிற்கு ஈடுகொடுக்க வேண்டும். என்ற நிலைக்கு தள்ளப்பட்டது தி.மு.க. அதிமுக தற்போது ஆளும் கட்சி இன்னும் 6 மாதங்கள் உள்ளது தேர்தலுக்கு அதனால் மக்கள் நல திட்டங்கள் மேம்பாலங்கள் என அதிமுக அரசு சிறப்பாக செய்து வருகிறது.
கொரோனா விஷயத்தில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவது . கேரளாவை பாருங்கள் அதுபோல் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை விட்டவர் தான் ஸ்டாலின். ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா தாண்டவமாடுகிறது, கேரளா கம்யூனிஸ்ட் அரசு தத்தளிக்கிறது. ஒருபுறம் தங்க கடத்தல் ஒருபுறம் பாலியல் தொல்லை மற்றொரு புறம் கொரோனா என பினராயி விஜயன் முழித்து கொண்டு வருகிறார். கேரளாவை பார் என கூறிய திமுக தற்போது கொரோன விஷயத்திலும் அதிமுகவை குறை சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் வெள்ளை வேட்டி, சட்டையுடன் ஒருவர் காலில் விழுந்து கும்பிடும் படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள உதயநிதி, “டெட்பாடி போல் விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார்?” என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை டேக் செய்து கேட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒருவர் “ஆக ஆகன்னு உங்களுக்கு நான்கு வருடம் பைத்தியம் பிடிக்க வைத்ததே இவர்கள் தான்” என பதிலடி தந்துள்ளார். இன்னொருவர் “கொஞ்சமாவது நாகரிகமாக பேச பழகி கொள்ளுங்க. கலைஞரின் வழி வந்தவர்கள் அல்லவா நீங்கள்” என கிண்டலாக கூறியுள்ளார்.
“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு எடப்பாடி பழனிசாமியின் கையை பிடித்து கெஞ்சினேன், ஆனாலும் அவர் மறுத்துவிட்டார்” என ஸ்டாலின் முன்னர் கூறிய செய்தியை ஒருவர் பகிர்ந்துள்ளார். தி.மு.க.,வினர் உதயநிதிக்கு கருத்துக்கு ஆதரவாக இ.பி.எஸ் .மற்றும் ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கும் அ.தி.மு.க.,வினர் பதிலடி தருகின்றனர்.
வேலியில் போற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாகி உதயநிதி போடும் டுவிட்டர் பதிவுகள் திமுகவை காலி செய்து வருகிறது . அதிமுக பலம் பெறுகிறது. உதயநிதியால் கடுப்பாகி பலர் திமுகவில் இருந்து விலகும் நபர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















