‘நீட் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை’ என்ற தன் பொங்கல் பதிவில் சூரியா, “கொரோனா பயத்தால் உயிருக்கு பயந்து நீதிமன்றம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தீர்ப்பு சொல்கிறது. ஆனால் மாணவர்கள் நேரில் சென்று நீட் எழுத வேண்டும்” என்று நீதிமன்றத்தை விமரிசித்துள்ளார். (படம் 1)
முதலில்… அந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது “கொரோனா காலத்தில் நேரில் சென்று தேர்வு எழுத வேண்டுமே” என்ற அச்சத்தால் இல்லை… “தேர்வு எழுதி தேர்ச்சி பெற மாட்டோம்” என்ற அவநம்பிக்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். எனவே, ‘நீதிபதிகள் நீதிமன்றம் செல்லாமல் மாணவர்களை போக சொல்லலாமா?” என்ற கேள்விக்கு இடமில்லை. அகரம் ஃபௌண்டேஷன் மூலம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விஷயங்களை சொல்லித் தரலாமே செல்தட்டி குடும்பத்தார்????
“நீதிமன்றம் மூடிக் கிடக்கிறது” என்பது எவ்வளவு தூரம் உண்மை? நீதிமன்றங்கள் இயங்கத் தொடங்கி விட்டன. நேரில் சென்று வாதிடுங்கள் என பார் கவுன்சில்கள் சொல்லிவருகின்றன. என்றாலும் சம்பந்தப்பட்ட அனைவரும் – 94% வழக்கறிஞர்கள் உட்பட – வீடியோ கான்ஃபரன்சிங்கை தேர்ந்தெடுக்கிறார்கள். (படம் 2,3,4). டில்லி உயர்நீதிமன்றம் செயல்படத் தொடங்கியதிலிருந்து 45 பேருக்கு கொரோனா. அங்கிருந்த UCO Bank கிளையின் மூவருக்கு கொரோனா என்றதும் அந்த கிளை இப்போது மூடப்பட்டுள்ளது. (படம் 4 – இன்றைய டைம்ஸ் ஆஃப் இண்டியா).
அது மட்டுமல்லாமல், பாராளுமன்ற குழு சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், “இனி வழக்கமான நீதிமன்றங்களோடு, virtual நீதிமன்றங்களும் இயக்கப்பட வேண்டும். நேரில் விசாரிக்க வேண்டிய வழக்குகள் தவிர மற்றவை virtual நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டால் வழக்குகள் விரைந்து முடிக்கலாம். தேக்கம் குறையும்” என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே சூரியா தன் உணர்ச்சியை ட்விட்டரில் பொங்காமல் களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு பேசுவது நல்லது.
கூடுதல் தகவல்: “நீதிமன்றத்தை மூடிவிட்டு தலைமை நீதிபதி பைக்கில் சுற்றுகிறார்” என்று ட்வீட் போட்டதால் நீதிமன்ற அவமதிப்பு தண்டனை கிடைத்தது. இந்த முறை அபராதம் ரூ 1 என்றாலும், அடுத்த முறை செருப்படி நிச்சயம். சூரியாவும் அதே தவறைத்தான் செய்திருக்கிறார். இவர் மீது நீதிமன்றம் அவதூறு நடவடிக்கை எடுத்தால் சிக்கல் தான்….
முந்தைய பதிவு கமெண்டில்
My heart goes out to the three families..! Can’t imagine their pain..!!
https://twitter.com/Suriya_offl/status/1305151857161981953
Fully Cooperate, Make Use of Physical Opening of Courts To Mitigate The Hardship: Bar Council Of Delhi Requests Advocates [Read Letter]
https://www.livelaw.in/news-updates/fully-cooperate-make-use-of-physical-opening-of-courts-to-mitigate-the-hardship-bar-council-of-delhi-requests-advocates-161603
Only A Handful Of SC Advocates Give Consent To Appear Physically In 1000 Cases Listed For Physical Hearing
https://www.livelaw.in/top-stories/only-a-handful-of-sc-advocates-give-consent-to-appear-physically-in-1000-cases-listed-for-physical-hearing-162155
Delhi: Covid rising, 94% HC lawyers opt out of physical hearings
https://timesofindia.indiatimes.com/city/delhi/delhi-covid-rising-94-hc-lawyers-opt-out-of-physical-hearings/articleshow/78084522.cms
Integrate virtual courts into legal ecosystem: Parliamentary panel
https://www.deccanherald.com/national/integrate-virtual-courts-into-legal-ecosystem-parliamentary-panel-885843.html
கட்டுரை: வலதுசாரி சிந்தனையாளர் செல்வ நாயகம்.