கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி பொறுப்பு வகித்து வருகிறாா். கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைத்து அவமதித்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மோகன்ராஜ் (திமுக கட்சியை சார்ந்தவர்), ஊராட்சி செயலா் சிந்துஜா ஆகியோா் மீது புகாா் தெரிவித்தாா். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தி வந்தவுடன் திருமா என்பவரை தேடிபார்த்தால் சத்தமே இல்லை “அடங்க மறு, அத்துமீறு” என கொள்கையை கொண்ட திருமாவளவன் தி.மு.க என்றால் எப்படி பம்முகின்றார் என்பது உலகம் அறியவேண்டிய ஒன்று.கொள்கையினை விட சட்டமன்ற தேர்தலில் அவருக்கு கிடைக்க போகும் ஓரிரு சீட்டுகள் அவருக்கு அவ்வளவு முக்கியம் போல ஆக திருமா தி.மு.க தயவில் எம்.பியாகிவிட்டார், ஆனால் தொடர்ந்து தலித்துக்கள் தி.மு.கவினரால் இழிவு செய்யபடுகின்றனர்.
இது பற்றி ஆ.ராசாவோ இல்லை இதர திமுக சாதி ஒழிப்பு போராளிகளோ ஒரு வார்த்தை பேசட்டும்? ஏன் சாதியை ஒழித்த ஈ.வே.ரா கோஷ்டிகள், பெண் உரிமை காக்க வந்த சிங்கங்கள் ஒரு வார்த்தை பேசட்டும்?அட இவ்வளவு நடந்திருக்கின்றது, அப்பெண்ணை அப்படி இழிவுபடுத்தியது எந்த சாதி என ஒரு பத்திரிகையோ கட்சியோ சொல்லவில்லை அல்லவா?
இதுதான் தமிழக அரசியல் மற்றும் பத்திரிகையின் ஊடக தர்மம் இதுவே ஒரு பிராமணன் அந்த பட்டியல் இனபெண்ணை “தள்ளி நில்” என சொல்லியிருந்தால் இப்பொழுது நாடு தாங்கியிருக்கும்? இது தான் திமுகவின் சாதி ஒழிப்பும், பெரியாரின் சமூக நீதியும்!