விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்துள்ள,மனம்பூண்டி பகுதியில்,இன்று ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட ஐஜேகே மாவட்ட தலைவரும், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளர், ஒரேதேசம் அறக்கட்டளை கௌரவத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மரக்கன்று நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
உடன் இந்நிகழ்வில் ஒரேதேசம் அறக்கட்டளை தலைவர் ஹரிகிருஷ்ணன், ஐஜேகே மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தேவி பாலமுருகன், தலைமை கழக பேச்சாளர் சிதம்பரநாதன், மனம் பூண்டி ஒன்றிய செயலாளர் லட்சுமி நாராயணன்,ஒன்றிய பொருளாளர் தனசேகர், ஒன்றிய இளைஞரணி தலைவர் கிஷோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.