சில நாட்களுக்கு முன் திமுகவின் அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலைஞர் வாசகம் வட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது உயர் நீதிமன்றம் நீதிபதியாக பதவி பெற்றது திமுக போட்ட பிச்சை என பேசினார்.
தலித் மக்களை கீழ்த்தரமாக எண்ணி தான் அவர் பிச்சை என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். கூடாரம் எனவும் விமர்ச்சித்தார்.
இது சட்டத்திற்கு புறம்பானது. உச்ச நீதிமன்றத்தை ஒரு அமைப்பை சார்ந்தது என கூறுவது அரசியல் சாசன சட்ட பிரிவுக்கு எதிரானது ஆகும் . ஊடகங்களை மிகவும் கீழ்த்தரமாக ரெட் லைட் ஏரியா என விமர்சனம் செய்தார்.பிராமணர்களை நாயே என கூறியது மிக தவறாகும். நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு ஒரு சமூகத்தை பற்றி கீழ்த்தரமாக பேசுவது சட்ட விதிமுறை மீறல் ஆகும்.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த தடா பெரியசாமி வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்கு தொடரபோகதவும் இதுகுறித்து பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் மனு அளிக்க இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லால் திமுக பிரிவினை சக்திகளுடன் கைகோர்த்து இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கில் செயல்படுகிறது. அதற்கான ஆதாரங்கள் உள்ளது.

பிரசாந்த் கிஷோர் அதற்கு உறுதுணையாக இருக்கிறார் என்றும் கூறினார். மேலும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முறையிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் தி.மு.க கதிகலங்கியுள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















