Wednesday, August 10, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அம்பலம் ! என்.ஜி.ஓ., போர்வையில் பயங்கரவாதம்… பாக், சதியை கண்டுபிடித்தது என்.ஐ.ஏ !!

Oredesam by Oredesam
January 5, 2022
in இந்தியா, செய்திகள்
0
அம்பலம் ! என்.ஜி.ஓ., போர்வையில் பயங்கரவாதம்… பாக், சதியை கண்டுபிடித்தது என்.ஐ.ஏ !!
FacebookTwitterWhatsappTelegram

 ;இந்தியாவில் பயங்கரவாதத்தை துாண்ட, பாகிஸ்தான் பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவன போர்வையில், ஜம்மு – காஷ்மீரில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதிகளாக்கும் சதிச் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவுடன் மூன்று முறை நேரிடையாக போரிட்டு பாகிஸ்தான் படுதோல்விகளை சந்தித்தது. இதையடுத்து இந்தியாவுடன் நேரடியாக மோத முடியாது என்பதை அறிந்து, பயங்கரவாதம் என்ற மறைமுகப் போரில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

தன் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கான இடமாக ஜம்மு – காஷ்மீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, 2019ல் மத்திய அரசு ரத்து செய்தது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் எடுத்து வரும் நடவடிக்கையால் பயங்கரவாதம் சற்று அடங்கியுள்ளது. இதற்கிடையில் ஜம்மு – காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றியும், அதற்கு நிதியுதவி செய்வோர் பற்றியும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்துவருகிறது. என்.ஐ.ஏ., விசாரணையில் ஜம்மு – காஷ்மீரில் சில என்.ஜி.ஓ.,க்கள் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.ஜே.கே.சி.சி.எஸ்., எனப்படும் ‘ஜம்மு – காஷ்மீர் கொலிஷன் ஆப் சிவில் சொசைட்டி’ என்ற என்.ஜி.ஓ., அமைப்பு, பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை என்.ஐ.ஏ.,கண்டுபிடித்தது.

READ ALSO

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

இதையடுத்து ஜே.கே.சி.சி.எஸ்., தலைவர் குர்ரம் பர்வேசின் வீடு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள அதன் அலுவலகத்தில், கடந்த நவம்பரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.இதில் என்.ஜி.ஓ., என்ற போர்வையில் ஜே.கே.சி.சி.எஸ்,, பயங்கரவாத செயல்களை துாண்டி வருவதற்கான ஆதாரங்ளையும், நிதியுதவி செய்ததற்கான ஆதாரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் இந்திய ராணுவத்தின் முக்கியமான இடங்கள், இந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றின் வரைபடங்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.பயங்கரவாதத்தை துாண்டும் போஸ்டர், ‘நோட்டீஸ்’ ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து குர்ரம் பர்வேஸ் கைது செய்யப்பட்டார்.அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இது பற்றி என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜே.கே.சி.சி.எஸ்., பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தொண்டு நிறுவனம். ஜம்மு – காஷ்மீரில் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்ப்பது தான், இதன்முக்கிய பணி.
ஜம்மு – காஷ்மீர் உட்பட இந்தியாவில் எங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதுடன், அதற்கான நிதியுதவிகளையும் ஜே.கே.சி.சி.எஸ்., செய்து வந்துள்ளது.

மனித உரிமை போராளியாக தன்னை காட்டிக் கொண்ட பர்வேஸ், இளைஞர்களிடம் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வை துாண்டி, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளார்.இதற்காக பாகிஸ்தானிலிருந்து அவருக்கு கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது. மேலும் பல போலி என்.ஜி.ஓ.,க்களை துவக்கி வெளிநாடுகளில் இருந்தும் நிதி பெற்றுள்ளார். தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்த பின், ஜே.கே.சி.சி.எஸ்., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு நிதி கிடைப்பது கஷ்டமாகியுள்ளதுபயங்கரவாத செயல்

ஜம்மு – காஷ்மீரில் பிரிவினைவாதத்தை துாண்ட பல்வேறு ஆங்கில பத்திரிகைகளை பர்வேஸ் வெளியிட்டு வந்துள்ளார். இதற்கு தனக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தியுள்ளார். ஜே.கே.சி.சி.எஸ்., மட்டுமின்றி ‘ஆசியா ஜிலானி டிரஸ்ட், ஆக்சன் எய்டு இன்டர்நேஷனல்’ உட்பட வேறு அமைப்புகளும் என்.ஜி.ஓ., என்ற பெயரில் பயங்கரவாதசெயல்களில் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.பர்வேஷ் கைது செய்யப்பட்டதை அறிந்த பாகிஸ்தான் கதி கலங்கி போயுள்ளது. அதனால் தான் அவரை விடுவிக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகளை, பாகிஸ்தானின் பல்வேறு அமைப்புகள் நாடியுள்ளன.என.ஐ.ஏ., தன் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாதிகளை அனுப்பஉளவுத்துறை சதி
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் நினைவிடமான குருத்வாரா தர்பார் சாஹிப் பாகிஸ்தானில் அமைந்துள்ளது.அவரது நினைவு நாளில் நம் நாட்டில் உள்ள பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் அங்கு செல்வது வழக்கம். இதற்காக இரு நாடுகளுக்கு இடையே கர்தார்பூர் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் வழியாக லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப பாக்., உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து நம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்த தகவல் வருமாறு:நடப்பாண்டில் சீக்கியர்கள் வேடத்தில் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகளை நம் நாட்டிற்குள்அனுப்பி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்த, பாக்., உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டு உள்ளது.இதற்காக முகமது குல்சார் மக்ரே மற்றும் முகமது சஹ்ஜதா பந்தே உள்ளிட்ட ஐந்து பயங்கரவாதிகளுக்கு சகர்கர் பகுதியில் உளவுத்துறை கண்காணிப்பில் இரு வார பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கான நிதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஐ.எஸ்.ஐ., வழங்கி வருகிறது.இவ்வாறு தகவல் வெளியாகி உள்ளது.

ShareTweetSendShare

Related Posts

தி.மு.கவை வேரோடு அசைத்து பார்க்க ரெடியான அண்ணாமலை! அந்த ஆடியோ டேப் எப்போது வெளியீடு?
அரசியல்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..

August 8, 2022
பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
சினிமா

பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !

August 8, 2022
தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

August 7, 2022
ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை  கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !
இந்தியா

ஹிந்து இளைஞரை மணந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, தனது மகளை கொல்ல முயன்ற இஸ்லாம் கான் !

August 7, 2022
துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.
இந்தியா

துப்பாக்கி ஏந்தியவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதில்-ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி.

August 3, 2022
அதானியுடன் கூட்டு வைத்துள்ள திமுக -உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்..
இந்தியா

அதானியுடன் கூட்டு வைத்துள்ள திமுக -உண்மையை போட்டு உடைத்த நிர்மலா சீதாராமன்..

August 2, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!

சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!

April 11, 2020
தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

December 20, 2020
அறிவாலயத்தில் மண்டியிட்ட திருமாவளவன் – திருமாவளவனை வச்சு செய்த கார்ட்டூனிஸ்ட் பாலா

அறிவாலயத்தில் மண்டியிட்ட திருமாவளவன் – திருமாவளவனை வச்சு செய்த கார்ட்டூனிஸ்ட் பாலா

February 21, 2020
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி:  பா.ஜ., – அ.தி.மு.க தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி: பா.ஜ., – அ.தி.மு.க தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு?

January 12, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x