தமிழக அரசியலில் 100 ஆண்டுகளாக கோலோச்சி வரும் திராவிட அரசியல் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி வருகி றது என்றே கூறலாம்.
இந்த தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படும் பொழுது உருவாகும் எதிர்கால அரசியல் தமிழ் தேசிய அரசியலையும் இதற்கு மாற்றாக இந்து தேசிய அரசியலையும் தமிழகத்தில் வளர வைக்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழகத்தில் வளர்ந்து வரும் தமிழ் தே சிய சிந்தனை இது வரை தமிழன் திரா விடன் என்று இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வரும் திராவிட அரசியலை இளைய தலைமுறையினரிடையே நான் தமிழன் என்று உணர வைக்கப்பட்டு வருகிறது. உணர வைத்து வருகிறார் சீமான்.
சீமான் எடுத்து செல்லும் தமிழ் தேசிய அரசியல் இப்போதைக்கு பிஜேபி எதிர்ப்பு அரசியல் அதாவது இந்து மத எதிர்ப்பு அர
சியல் மாதிரி தெரிந்தாலும் திராவிட அரசியல் வீழும் பொழுது அதனால் பலன் அடைய இருப்பது தமிழகத்தில் பிஜேபி தான்.
ஏனென்றால் இப்பொழுது திராவிடன் என்று தோள் தட்டி தமிழகத்தில் நிற்கும் தமிழர் அல்லாத பிற மொழி பேசி வாழும்
மக்களின் அடுத்த சாய்ஸ் பிஜேபியாகத்தான் இருக்க முடியும். திராவிடன் என்ற பெயர் மாற்றி இந்து என்று அதில் அடைக்
கலமாவார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை மத அரசியலை விட இன அரசியல் தான் பிஜேபியின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியும்.
ஏனென்றால் தமிழகத்தில் சுமார் 85 சதவீதம் உள்ள இந்துக்கள் இடையே 8 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும்7 சதவீதம் உள்ள முஸ்லிம்களிடையே மோதல்கள் ஏற்பட்டால் தான் தமிழகத்தில் பிஜேபி வளர முடியும்.
ஆனால் நாம் தமிழர் கட்சி மூலமாக தமிழகத்தில் தூண்டப்பட்டு வரும் இன அரசியல் மூலமாக தமிழகத்தில் தமிழர் VS பிற மொழியினர் என்று அரசியல் மாறும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ளவர்களில் சுமார் 35 சதவீதம்
தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் அல்ல.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அறிவித்து உள்ள கணக்கின் படி பார்த் தால் தமிழகத்தில் 1.95 கோடி மக்கள்
தெலுங்கினை தாய் மொழியாக கொண்டவர்கள் அதாவது தமிழக மக்கள் தொ கையினில் சுமார் 27 சதவீதம் தெலுங்கினை தாய் மொழியாக கொண்டவர்கள்.
அடுத்து .சுமார் 3 சதவீத மக்கள் கன்னட த்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.சுமார்1 சதவீதம் மலையாளிகள் இருக்கிறார்கள்.
ஆக மொத்த மாக சுமார் 30 சதவீத மக்கள்தமிழ் மொழி யை தாய் மொழியாக கொண்டவர்கள் அல்ல.
இவர்களுக்கு எதிராக நாம் தமிழர் எடு த்து செல்லும் இன அரசியல் இவர்களை இப்பொழுது திராவிட கட்சிகளை நோக்கி
கொண்டு சென்றாலும் எதிர்காலத்தில் திராவிட கட்சிகள் வலுவிழக்க ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் திராவிட அடையாளம் மறந்து இந்துக்கள் என்கிற அடையா ளத்துடன் தானாகவே பிஜேபியை நோக்கி வருவார்கள்.
அதற்கான வாய்ப்பாகஙே நாம் தமிழர் கட்சியின் இன அரசியலை நான் பார்க்கிறேன்.
அதாவது 100 ஆண்டுகளுக்கு முன் தமி ழர்கள் இல்லாத மக்களுக்கு தேவைப்பட்ட திராவிடன் என்கிற அடையாளம் எதிர்காலத்தில் தமிழ் தேசிய அரசியல் வள ர்ந்து திராவிட அரசியல் முடியும் பொழுது அது இந்து தேசிய அரசியலாக தமிழகத்தில் மாற முடியும்.
ஒரு காலத்தில் வட மாவட்டங்களில் இரு க்கும் முந்திரிக்காடுகளில் மட்டுமே முகா ம் இட்டு முடங்கி இருந்த தமிழ் தேசியம் என்கிற வார்த்தை இன்று சீமான் மூலமாக சர்வ சாதரண மாக தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்கள் மத்தியி லும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.
சீமானின் தமிழ் தேசிய அரசியல் திரா விட இயக்கங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதை .
அதாவது திமுக மதிமுக கட்சி களுக்கு பயத்தையும்பாதிப்பையும் ஏற்ப டுத்தி வருகிறது என்பதை சோஷிய ல் மீடியாக்களில் வலம் வரும் திமுக ம ற்றும்மதிமுக நன்பர்களின் பதிவுகளில்
இருந்து அறிந்து கொள்ளலாம்
திராவிடஇயக்கங்கள் இனி தமிழ்நா ட்டிற்க்கு தேவை இல்லை.ஏனென்றால் 100 வருடங்களுக்கு முன் இருந்த செ ன்னை மாகாணத்தில் இருந்த தெலுங்கர் கன்னடர் மலையாளி அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய தேவைப்பட்ட ஒருஅமைப்பு தான் திராவிட இயக்கமே தவிர அது தமிழர் நலனு க்காக உருவாக்கபட்ட அமைப்பு அல்ல.
20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போ ட்டியாக இருந்தது ஹோம் ரூல் இயக்கம் தான்.ஹோம்ரூல் இயக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட இந்து மத அடிப்படையி லான தேசிய அரசியலை திலகரும் அன் னி பெசன்டும் முன்னெடுத்து சுயாட்சி முழக்கமிட அதில் நிறைய பிராமணர்கள் உள்ளிட்ட இந்து மத உணர்வாளர்கள தா ன் அதிகமாக இருந்தார்கள்..
இந்த நேரத்தில் 1916 ல் அன்றைய மெ ட்ராஸ் இம்பீரியல் சட்ட மன்றத்திற்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட நீதிக்கட்சி யின் முன்னோடிகளான பி டி ,நாயரும் தியாகாராஜ செட்டியாரும் பிராமணர்க ளான வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி மற்று ம் கே.வி. ரங்கசாமி ஐயங்கார் ஆகியோ ரால் தோற்கடிக்கபட்டார்கள்
இந்த தனி மனித தோல்விதான் நீதிக்க ட்சி துவங்க காரணமாக இருந்ததே தவிர இவர்கள் கூறிய சமூக நீதி போராட்டத்தால் தோன்றவில்லை அன்றைய பிராமணர்களால் தோற்கடிக்கப் பட்டு அட்ரஸ் அரசியலில் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜமீன்தார்களுக்கு அவர்க ளை எதிர்க்க வெள்ளைக்காரன் உருவாக்கி விட்ட இயக்கம் தான் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்கிற ஜஸ்டிஸ் கட்சி.
சுயாட்சி கேட்டு போராடிய ஹோம்ரூல் இயக்கத்தை எதிர்க்க வெள்ளைக்கார னுக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது.
அரசியல் ரீதியாக பிராமணர்களை எதிர் கொள்ள அன்றைய ஜமீன்தார்களுக்கு ஒரு அடித்தளம் தேவைப்பட்டது.இதனால் தான் திராவிட அரசியல்பிறந்தது.
இதற்கு மூலப்பொருளாக இங்கிலாந்தி ல் இருந்து ஆங்கிலேய அரசினால் இற க்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் மதம் மாற்றம் செய்ய வந்த கால்டுவெ ல்லும் மற்றும் மாக்ஸ் முல்லர் மூலமாக ஆரிய திராவிட கதைகள் அள்ளி விடப் பட்டது.
திராவிட கழகத்தின் முன்னோடியான நீதிக்கட்சி 1916 ல் உதயமான பிறகு 1920 முதல் 1937 வரையுள்ள 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது .
நீதிக்கட்சி தொ ட ங்கியபோது அதன் கொள்கையைப்பரப்பு வதற்கு மூன்று மொழிகளில் நாளிதழ்களைத் தொடங்கினார்கள்.ஓன்று தமிழ் இன்னொன்று தெலுங்கு மற்றொன்று ஆங்கிலம்.
இதில் காமெடிஎன்னவென்றால் தமிழில் வந்த நீதிக்கட்சியின் பத்திரிக்கையின் பெயர் திராவிடன்.
தெலுங்கில் வந்த
பத்திரிக்கையின் பெயர் ஆந்திர பிரகா சிகா சூப்பர்ல..
அப்பொழுதே எவ்வளவு தெளிவாக தமிழன் ஏரியாவில் மட்டும் திராவிடன் என்று பத்திரிக்கையை வெளியிட்டு அவனை முட்டாளாக்கி யுள்ளார்கள் பாருங்கள்….
நான்கு மொழியினர் கலந்து வாழ்ந்த அ ன்றைய செ ன்னை மாகாணத்தில் தெலு ங்கு மக்கள் அதிகமாக வாழ்ந்த சென் னையை தாண்டிய ஆந்திரப்பகுதியில் மட்டும் நீதிக்கட்சி ஆந்திர பிரகாசிகா என்கிற இடத்தை குறிக்கும் பத்திரிக்கையை நடத்துகிறது ஆனால் சென்னைக்கு தெற்கேயுள்ள பகுதியில் மட்டும் திராவிடன் என்று இனத்தை குறிக்கும் பத்திரிக்கையை நடத்துகிறது.
இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சி யின் ஆட்சியில் பதவியில் இருந்த ஐந்து முதல்வர்களும் தெலுங்கை தாய் மொழி யை கொண்டவர்களே…ஆக தமிழ் நாட்டில் மட்டும் மையம் கொண்ட திராவிட.
அரசியலின் மூலம் மொழி அடிப்படையால் தான் உருவானதே தவிர இன அடிப்படை யில் அல்ல என்று புரிந்து கொள்ளலாம்.
அதாவது தமிழ் மொழியை ஆகாரமாக கொண்ட பிராமண தலைவர்களை அரசி யலில் வீழ்த்த தெலுங்கு மொழியை ஆதாரமாக கொண்ட ஜமீன்தார்கள் எடு த்த ஆயுதம்தான் திராவிடம் .இதற்கு ஸ்பான்சர் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள்.உடனே ஆங்கிலேயர்களுக்கு எதற்கு பிராமண வெறுப்பு என்று நீங்கள் கேட்க லாம்..
பிராமணர்கள் உருவாக்கி வைத்து இரு ந்த கல்விமுறையில் இந்தியாவின் ப ண்பாடும்இந்து மதகலாச்சாரமும் இரு ந்ததால் அதன் வழியில் வரும் கல்வி
தலைமுறை தலைமுறையாக கடந்து நி ன்று தங்கள் மத மாற்றத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு அப்போது சென்னை மாகாணத்தில் இருந்த பிராமணர vs தெலு ங்கு ஜமீன்தார் போட்டி அரசியலை கை யில் எடுத்துக்கொண்டது.
1937 தேர்தலில் மக்கள் இவர்களை படு தோல்வி அடைய செய்த காரணத்தினா ல் .கடைசியில் இவர்க ளும் நீதிக்கட்சி என்கிற பெயரை கழற்றி விட்டு 1944 ம் ஆண்டில் திராவிட கழகமாக உருமாறி தேர்தல் அரசியலை விட்டு விலகினார்க ள்.இந்த காலகட்டத்தில் தா ன் சி.பா ஆதி த்தனார் நாம் தமிழர் கட்சியை துவக்கி தமிழ் தேசியத்தை முன்னெடுக்க ஆரம்பி க்கிறார்.
அவரோட கெட்ட நேரம் திராவிடர் கழகத்தில் இருந்துபிரிந்து திமுக உருவானதால் மாற்று சிந்தனை புதிய தலைமை என்று மக்கள் திமுக மீது ஈர்ப்புகொள்ள ஆரம்பித்ததால் ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி போணியாக வில்லை.இதனால் ஆதித்தனார் காலப்போக்கில் திமுக வில் ஐக்கியமாகி விட்டார்.
அதற்கு பிறகு 1948 ல் உருவான சிலம்பு செல்வர் மபோ சிவஞானத்தின் தமிழரசு கழகம் மொழி வாரி மாநிலங்கள் உரு வான பொழுது சில பகுதிகளை மீட்க போராடியதோடு சரி.
அதற்கு பிறகு தமிழ் தேசிய அரசியலை முன் வைத்து பெரியதாக சாதிக்க முடியவில்லை.
இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை மக்கள் மனதில் பதியவைத்தவர் சிலம்பு செல்வர் தான் .
அவர் கால த்தில் திராவிட அரசியல் அண்ணா கருணாநிதி எம்ஜியார் போன்றவர்களாலும் தேசிய அரசியல் ராஜாஜி காமராஜர் போ ன்றவர்களாலும் கொண்டு செல்லப்பட்ட தால் சிலம்பு செல்வரின் தமிழ்த்தேசிய அரசியலும் எடுபடவில்லை.
ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியல்ல. திராவிட இயக்கங்களில் வலுவான தலைவர்கள் இல்லை இதனால் திராவிட இயக்கங்கள் இனி அடுத்த தலைமுறை யை அடையும் சாத்தியக்கூறுகளே இல்லை என்றே கூறலாம்.இதே வருகின்ற
சட்டமன்ற தேர்தல் உணர வைக்கும்.
தமிழகத்தில் வளரும் இந்த தமிழ்தேசிய அரசியலினால் பாதிக்கப்படப்போவது திராவிட இயக்கங்கள் தானே தவிர தேசிய கட்சிகள் அல்ல.ஏனென்றால் ஒத்த கருத்துடைய இரண்டு இயக்கங்கள் ஒரே நேரத்தில் அரசியலில் எதிரும் புதிருமாக இருக்க முடியாது ஆனால் எதிரெதிர் சி ந்தனையுடைய இயக்கங்கள் அரசியலி ல் நேரெதிராக நின்று வளர முடியும்.
அதன்படி தமிழகத்தில் வளரும் தமிழ்த் தேசிய அரசியல் அதற்கு எதிர் நிலையான இந்து தேசிய அரசியலையும் வளர்த்து விடும் .
அதாவது நாம் தமிழர் கட்சி
யின் வளர்ச்சி எதிர் காலத்தில் திராவிட அரசியலை காலி செய்வதோடு தமிழ் தேசியத்திற்கு எதிரியான இந்து தேசிய அரசியலை முன்னெடுத்து பிஜேபியை வளர்த்து விடும் என்பதில் எனக்கு நம்பி க்கை அதிகரித்து வருகிறது
கட்டுரை எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















