இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன, அதுவும் நெடுஞ்சாலை அமைப்பதில் என்பது மிகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமென்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி 2 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய சாதனையாக பதிவு செய்யப்படுகிறது இந்த அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானம் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் வதோதரா (Vadodara) நகரை மும்பை மற்றும் டெல்லியுடன் நேரடியாக இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை (Expressway) இது.
தற்போது குஜராத்தில் பருச் அதிவேக நெடுஞ்சாலை (Bharuch Expressway) பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 2 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று 2 கி.மீ நீளமும் 18.75 மீட்டர் அகலமும் கொண்ட நெடுஞ்சாலை வெறும் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக, 1.10 லட்சம் மூட்டை சிமென்ட் (5.5 ஆயிரம் டன்) 500 டன் பனியும் பயன்படுத்தப்பட்டன.
கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Golden Book of World Records), மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) என இரண்டு சாதனைப் பதிவுகளில், 2 மணி நேரத்தில் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்ட இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவது சாதனை 12 ஆயிரம் டன் சிமென்ட் கான்கிரீட் கலவையை உற்பத்தி செய்தது. இரண்டாவது சாதனை கலக்கப்பட்ட கான்கிரீட்டை மிக வேகமாக இடுவது, மூன்றாவது சாதனை ஒரு அடி தடிமன் மற்றும் 18.75 மீட்டர் அகலம் கொண்ட கட்டுமானம் செய்தது என்பதாகும். நான்காவது சாதனை, தரத்தில் எந்தவித சமரசமும் செய்துக் கொள்ளாமல் நடைபாதையை பராமரிப்பது . இந்த பணிகள் அனைத்தும் வெறும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன, இதனால் இந்த அதிவேக நெடுஞ்சாலை ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகளை பதிவு செய்தது.