திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக பரப்புரை செய்து வருகிறார்.
தி.மு.க தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.. இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுர பேருந்து நிலையத்தில் வேனில் நின்றவாறு உதயநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்..

மது போதையில் இருந்த தி.மு.க தொண்டர் ஒருவர் பிரச்சார வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்ததை கண்டு தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















