சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜக பட்டேலுக்கு சிலை வைத்தது, ஆனால் நேரு மற்றும் காங்கிரஸ்தான் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டியது என்று கொஞ்சம் ஓவராகவே உதார் விட்டுத் திரிந்தனர் காங்கிரஸ் மற்றும் அதன் அல்லக்கை கோஷ்டிகளான கூட்டணிக் கட்சிகள்.
இந்த டுபாக்கூர் கோஷ்டிகளின் யோக்கியதை மீதிருந்த அபார நம்பிக்கையால் இந்த விஷயத்தை தோண்டி பார்ப்போம் என ஆராய்ந்ததில் இவர்கள் குட்டு வெளிப்பட்டது. இதோ சிக்கிய தகவல்கள்…
1956ல் AIIMS மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்று மந்திரி சபை தீர்மானித்த போது. பிரதம மந்திரி நேரு பணம் இல்லை என்று கை விரித்தார்.
உடனே கபுர்தலா இளவரசி அம்ரிதாகவுர் சிம்லா பங்களா உட்பட பல சொத்துக்களை விற்றார்..!
உலகம் முழுவதும் பயணம் செய்து பணம் சேகரித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டினார்.
அதற்கு பிறகு பாருங்கள், 2003 வரை நாட்டில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்தது.
அப்போதைய பாஜக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார். “தொலைதூரத்திலிருந்து ஏழைகள் ஏன் மருத்துவமனைக்கு வருகிறார்கள்..? எனினும் எய்ம்ஸ் மருத்துவமனையை ஏழைகள் இடத்திற்கு அனுப்ப வேண்டும் .”
உடனடியாக களத்தில் இறங்கினார்.
போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், ராய்ப்பூர் பாட்னா, ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்ட களத்தில் இறங்கினார். (இவை அனைத்தும் 2012 முதல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.)
அரை நூற்றாண்டுக்கு மேலாக தூக்கத்தில் இருந்த காங்கிரசுக்கு 2013-ல் வந்ததே கோபம் ? சோனியாகாந்தியின் சொந்தத் தொகுதியான ரேபரேலியில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டினார்கள். இந்த நிலையில் எட்டு எய்ம்ஸ் மட்டுமே இந்தியாவில்.
2014-ல் மோடி மகான் மோடிஜி வந்தார். 2014 முதல் 2019 வரை பல்வேறு காலகட்டங்களில் நாடு முழுவதும் மங்களகிரி, நாக்பூர், கோரக்பூர், கல்யாணி, பதிந்தா, கவுஹாத்தி, விஜய்பூர், பிலாஸ்பூர், மதுரை, தர்பஙகா, தியோகர், ராஜ்கோட், பீபிநகர், மனேதி ஆகிய 14 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்ட உத்தரவிட்டார்.
இதில் 8 மருத்துவமனைகள் தற்போது மக்களுக்கான மருத்துவ சேவைகளை அளித்து வருகின்றன. மீதமுள்ள 6 மருத்துவமனைகளின் கட்டுமான பணி கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளன.
இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும் அடங்கும் என்பதால் போராளிகள் அவசரப்பட்டு பூட்டை ஆட்ட வேண்டாம்.
ஆக வாஜ்பாய் அவர்கள் காலத்தில் 6, மோடி அவர்கள் காலத்தில் 14 என மொத்தம் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான திட்டம் துவங்கப்பட்டது பாஜக அரசின் 13 வருட ஆட்சிக்காலத்தில்தான்.
நேருவின் ஆட்சிகாலத்தில் டெல்லி மற்றும் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் ரேபரேலி என சுமார் அறுபது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இரண்டே இடங்களில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்கப்பட்டன என்பதே உண்மை.
இந்த விஷயத்தில் பல ஆண்டுகளாக பிரதமர் பதவி வகித்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகிய உத்தமகாந்தி(?!)கள் இந்த விஷயத்தில் எந்த துரும்பையும் நகர்த்தவில்லை என்பதே நிதர்சனம்…!
எனவே நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கெல்லாம் நாம் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும் என இந்தப் பதிவை படிக்கும் அறிவுள்ள அனைவருக்கும் புரிந்திருக்கும்.
- தெய்வத்திரு அம்ரித் கவுர்
- தெய்வத்திரு சுஷ்மா சுவராஜ்
ஆகிய தாய்க்குலங்கள்தான்..!
அவர்கள். ஏழை எளிய மக்களின் சுகாதாரத்திற்கும் ஆரம்ப புள்ளிகளாக இருந்து, ஆசீர்வாதமும் விரிவாக்கமும் கொடுத்தது இந்த பெண்மணிகள் தான்.
வணங்குகிறோம் மனித கடவுள்களை!
வந்தே மாதரம்!
பாரத் மாதாகி ஜெய்.