அருணாச்சல பிரேதேசம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தினை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நாட்டா அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அருணாச்சல பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொடு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா அவர்கள் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கிய பொது இந்தியாவில் கொரோனா பரிசோதனை கூடம் ஒன்றுதான் இருந்தது.அதில் 1500 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மட்டுமே செய்யும் அளவில் இருந்தது. ஆனால் ஒரு வருடத்தில் தற்போது 2500 பரிசோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.
கொரோனவை எதிர்கொள்ள இந்தியா தன்னைத் தானே கட்டமைத்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது.பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9,446 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களில், இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை. இன்று இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நிறுவனங்களாக இது அதிகரிக்கும். இதன்மூலம் இந்தாண்டு டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.