“மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவின் அதிவேக ரயில்களாக அறியப்படுகின்றன. உட்கார்ந்து செல்லும் வசதியுடன் கூடிய ரயில்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் வேளையில் கூடிய விரைவில் பல்வேறு வழித்தடத்தில் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ – மும்பை இடையேயான வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அட்டவணை இந்த மாதத்தில் வெளியாகும். ஜூலை மாதத்தில் இருந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தனது சேவையை தொடங்கும் எனத் தெரிகிறது. உத்தரப்பிரதேசத்துக்கும் – மும்பைக்கும் இடையே போக்குவரத்தை மேம்படுத்த இந்த சேவை தொடங்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ரயில்வே தரப்பில் இருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில், “ கடந்த 6 மாதங்களாக எந்த வழித்தடத்தில் இயக்குவது என சர்வே எடுத்தோம். முதலில் கான்பூர், மதுரா மற்றும் ஆக்ரா வழித்தடத்தில் இயக்குவதற்கு கோரிக்கைகள் வந்தன. மற்றொரு வழித்தடமான அனோலா, மொராபாத், காசியாபாத் ஆகிய வழித்தடங்களும் கருத்தில் கொள்ளப்பட்டது. தற்போது லக்னோ – மும்பை ரூட் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் ஷாஜகான்பூர், பரேலி ஜங்சன், ராம்பூர், மொராபாத், காசியாபாத், ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆக்ரோ வழியாக மும்பையை சென்றடையும்.
இதற்கிடையில் தென் அமெரிக்க நாடான பராகுவேவின் அதிபர் சாண்டியாகோ பெனா, நம் நாட்டின் வந்தே பாரத் ரயில்களை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.வந்தே பாரத் ரயில் சேவை திட்டம் நம் நாட்டில், 2019ல் துவங்கப்பட்டது. முதல் ரயில் டில்லி – வாரணாசி இடையே இயக்கப்பட்டது. பயண நேரம் வெகுவாக குறைந்ததால் இந்த ரயிலுக்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து படிப்படியாக தற்போது நாடு முழுதும் 51 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதன் பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன
இதில் மேம்பட்ட பிரேக் அமைப்பு, தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்துடன் கூடிய பயணியர் தகவல் அமைப்பு, வைபை இணைய இணைப்பு, வசதியான இருக்கைகள் உள்ளன. உயர் வகுப்பு பெட்டிகளில் சுழலும் இருக்கை, அகன்ற ஜன்னல்கள் உண்டு.அதிகபட்சமாக மணிக்கு, 160கி.மீ., வேகத்தில் இயக்க முடியும்.
இந்நிலையில், டில்லி வந்துள்ள பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனாவை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சந்தித்தார். இந்திய ரயில்வேயில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து அந்நாட்டு அதிபரிடம் அஸ்வினி வைஷ்ணவ் விவாதித்தார். அவரிடம் வந்தே பாரத் ரயில்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் இருப்பதாக பராகுவே அதிபர் தெரிவித்தார்.மேலும், பராகுவேயின் அட்லான்டிக் மற்றும் பசுபிக் கடல்களை இணைக்கும் ரயில் திட்டத்தில் இந்திய ரயில்வே பங்கு பெற அழைப்பு விடுத்தார்.இனி கடல் தண்டி பறக்கவுள்ளது வந்தே பாரத்