தமிழகத்தில் 2001 -2006 வரை அதிமுக ஆட்சி நடைபெற்றது அந்த ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என கூறினால் மிகையாகாது. அரசு ஊழியர்களுக்கு கடிவாளம், போலி ரேஷன் அட்டை ஒழிப்பு மதமாற்ற தடை சட்டம் சட்டம் ஒழுங்கு சிறப்பு பல என்கவுண்டர்கள், என முக்கிய முடிவுகள் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய ஆண்டுகாலம் என்றால் இது 2001- 2006 தான் அதன் பின் எப்போதும் போல சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்களின் கைவரிசையால் திமுக ஆட்சியில் அமர்ந்தது. இந்த நிலையில் இது குறித்து மதுரை தி.மு.க எம்.எல்.ஏவும், தி.மு.க-வின் சமூக ஊடக பிரிவின் செயலாளராகவும் இருந்து வரும் PT தியாக ராஜன்.தற்போது ஒரு பகீர் உண்மையை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார் .
PT தியாக ராஜன் Red Pix என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் 2006-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த போது தி.மு.க-விடம் சொல்லி கொள்ளும் அளவு பணம் இல்லை என்றும், ஆனால், 2011 தேர்தலின் போது 5 வருடம் தமிழகத்தில் ஆட்சி புரிந்ததாலும், மத்திய சர்க்காரிலும் தி.மு.க பங்கி வகித்ததாலும் கோடி கோடியாய் பணம் தி.மு.க-விடம்கொட்டி கிடந்தது அந்த கோடிகளை வைத்து தேர்தலில் வெல்வதற்கு தண்ணீர் போல செலவு செய்தும் 2011 பொதுத்தேர்தலில் வெறும் 23 இடங்களே தி.மு.க-வால் வெல்ல முடிந்தது எனவும் இந்த பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார்.
தி.மு.க ஊழல் கட்சி என்று பலரும் பல தருணங்களில் கூறி வந்த நிலையில், அதை அக்கட்சியின் எம்.எல்.ஏ-வே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது கடும் சர்ச்சையை கிளப்ப இருக்கிறது தமிழக அரசியல் அரங்கில்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















