சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வருகுது செயல்படுத்தியது .இந்த ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக அரசின் சட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என ஆடம் பிடித்துவந்தது பின் நீதிமன்றம் சென்று மூக்குடைந்து திரும்பியது. பின் அரசின் சட்ட விதிகள் பற்றி ஆராய்ந்து உட்படுகிறோம் என சொல்லியது ட்விட்டர் நிறுவனம்.
இந்த நிலையில் சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி – குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி – ஆகியோரை நியமிக்க தவறியதால், ட்விட்டர் தன் இடைநிலை” (intermediary) அந்தஸ்தை இழந்தது!
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய ட்விட்டர் இயக்குனர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கொரோனா, ‘டூல்கிட்’ வழக்கு தொடர்பாக, ‘டுவிட்டர் இந்தியா’ நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஷ்வரியிடம், டில்லிகாவல் துறை விசாரணை நடத்தியதாக, அங்குள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்னை குறித்து, மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து, சில குழுக்களால் தயாரிக்கப்படும் ஆவணங்கள், ‘டூல்கிட்’ என அழைக்கப்படும். கடந்த சில மாதங்களாக இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
விவசாயிகள் போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான டூல்கிட்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.கொரோனா இரண்டாவது அலையின் போது, மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் டூல்கிட் வெளியிடப்பட்டது
மேலும் .ட்விட்டர் இந்தியாவின் இரண்டு அலுவலகங்களுக்கு, டில்லி சிறப்பு பிரிவு காவல் துறை கடந்த மாதம் நேரில் சென்றனர்.இதற்கிடையே, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள டுவிட்டர் அலுவலகத்துக்கு, கடந்த மாதம் சென்ற டில்லி காவல் துறை, அதன் நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஷ்வரியிடம், கொரோனா டூல்கிட் வழக்கு குறித்து விசாரணை நடத்தியதாக, மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
முகமது ஜுபேர் என்பவர், “உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்” என ஒரு வீடியோ பகிர, அதை விசாரித்த உபி காவல்துறை, “அந்த முதியவர் பாய் தாயத்து விற்பவர். அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் அவர்களுக்கு கெட்டது நடந்ததாக சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை ஜெய்ஶ்ரீராம் சொல்ல சொல்லவில்லை அவர்கள்” என்று கூறியுள்ளார்கள்.
கலவரம் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவை மியூட் செய்து பகிர்ந்திருந்தார். ஒலியில்லா வீடியோவை பார்த்து பொங்கி ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்தனர். பல ஊடகங்ககளும் அதை காப்பி செய்து பகிர்ந்தனர்.
ந்து முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயம் இருந்ததால், உ.பி போலீஸ் அந்த வீடியோவை ‘manipulated media’ என ட்விட்டரை அறிவிக்க சொல்லியும் ட்விட்டர் கேட்கவில்லை. அந்த முதியவரை பேச வைத்து வீடியோ எடுத்தவர் ஒரு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அடுத்த வருட உத்திர பிரதேச தேர்தலுக்குள் இம்மாதிரி கலவரத்தை தூண்டும் செயல்கள் நிறைய செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபொண்ட பதிவுகளை நீக்காமல் இருக்கும் ட்விட்டர் நிறுவனம் இப்போது அந்த இண்டர்மீடியரி அந்தஸ்தை இழந்ததால், அதன் பணியாளர்கள் கைது செய்யப்படுவர்!