புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிபாலம் அருகே அனுமதி இல்லாமல் திடீரென சர்ச் கட்ட தொடங்கியுள்ளார்கள். கன்யா குமாரி மாவட்டத்தில் தான் அதிகமாக மதமாற்ற நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென எழுப்பப்பட்ட சர்ச் கட்டிடம் மீது எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்நத முத்துக்குமார் ,மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இதை எதிர்த்து சர்ச் கட்டிடத்தை முற்றுகையிட்டு கட்டிடத்தின் அனுமதி சான்றிதழை கேட்டுள்ளார்கள். அதை தரமறுத்தனர் கட்டிட நிர்வாகத்தினர்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்நத முத்துக்குமார் ,மற்றும் ராஜேந்திரன் பின் அங்கேயே தர்ணா போராட்டத்தில் இறங்கினார்கள். அங்கு விரைந்த காவல் துறை இருவரையும் கைது செய்துள்ளனர். இதனை அறிந்த பா.ஜ.கவினர் மற்றும் இந்து இயக்கங்கள் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கு சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினார்கள்.
பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜ் அவர்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்தார். மேலும் நகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. காந்தி அவர்களும் போராட்டத்தில் இறங்கியதை தொடர்நது திருவட்டார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போராட்டம் செய்த பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டார்ள்
அனுமதி இல்லாமல் சர்ச் கட்டப்பட்டதற்கு சப் கலெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது அதன் பின் சர்ச் கட்டும் நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என உதவி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. போராட்டத்தின் போது கைது செய்யபட்ட பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கன்யாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் இந்துக்களுக்காக குரல் கொடுப்பதற்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து உடனடியாக மாவட்டம் முழுவதும் இருந்து பெருந்திரளாக கலந்து கொண்டு மக்கள் இந்துக்களின் உரிமையைக் கேட்டு போராடி கைதாகி போராட்டத்தினை வெற்றி பெற செய்தார்கள். இது அந்த மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. புதிய பாதையை நோக்கி கன்னியாகுமாரி மக்கள் நடைபோடுகிறார்கள்