கோவில் பூசாரியாக இருந்தவர் செல்லப்ப தேவர் இவரின் மகன்கள் பொன்பாண்டி மற்றும் மார்ட்டின் தேவர். மார்டினின் உடன்பிறந்த தம்பி பொன்பாண்டி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ததால் அவரை தொடர்ந்து முஸ்லீமாக மதம் மாற கூறி ஜாமத்திலிருந்து தொடர்ந்து நெருக்கடி மிரட்டல்கள் வந்துள்ளது மேலும் செல்லப்பா தேவர் 45 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை காலி செய்யவும் மிரட்டியுள்ளார்கள் அப்பகுதியை சார்ந்தவர்கள். தைக்கா (இஸ்லாமிய) தெருவில் வசிக்கும் ஒரே இந்து மார்ட்டின் தேவர் குடும்பம்.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பெர்னட்சேவியர் உதவி ஆய்வாளர் ராஜன் இருவரும் 6 மாதங்களுக்கு முன்பு மார்டின் மீது பொய் வழக்கு போட்டு காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்..! நீதிமன்றத்தில் மார்டின் புகாரில் காவல் ஆய்வாளர் , உதவிஆய்வாளர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது
பத்து நாட்களுக்கு முன்பு உதவிஆய்வாளர் ராஜன் மார்டின் மகளிடம் உன் அப்பன் சாக போறான் என மிரட்டியதை மகளோடு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மார்ட்டின்தேவர் அவர்கள். இந்நிலையில் மார்ட்டின் 10.6.2021 அன்று சாத்தான்குளம் பள்ளிவாசல் முன்பு மார்ட்டின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்..!
இது சம்பந்தமாக இந்திய தேசிய லீக் மாநில துணைப்பொதுச்செயலாளர் மக்தும் உள்ளிட்ட 11பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள போதும் 6 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள். மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்..! மக்தும் மற்றும் அவரது மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை
சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் இருவர் மரணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில்
மீண்டும் ஒரு மரணம் நடைபெற்றுள்ளது. காவல்துறை என்ன செய்கிறது.இதுபோல் மதத்திற்காக கொலை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறி வருகிறார்கள்.
மேலும் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து மதமாற்றத்திற்காக நடைபெறும் கொலைகளை தடுத்து நிறுத்த அரசு முன்வரவேண்டும். என இந்துக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மதம் மாற மறுத்து இந்துவாக வாழ்ந்த ஒருவரை வெட்டி வீழ்த்திய சம்பவம், எந்த ஊடகங்களிலும் வராமல் மூடி மறைக்கபட்டுள்ளது இந்நிலையில் கண்ணபாண்டியன் எஸ்கேபி நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று என்ன நடந்தது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து இந்து மத பிடிப்பு கொண்ட நபர்கள் கொலை செய்யப்படுவதும், அதனை பொது மக்கள் வேடிக்கை பார்ப்பதும் அதிகரித்து வருகிறது, முன்பு ராமலிங்கம் என்ற வன்னியர், சசிகுமார் என்ற தலித் இன்று மார்ட்டின் என்ற தேவர்.. இன்னும் எத்தனை சாதிகளின் உயிரை எடுக்க போகிறதோ இந்த பயங்கரவாதம்.இந்நிலையில் மார்ட்டின் சாவிற்கு நீதி கேட்டு இணையத்தில் நெட்டிசன்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















