நேற்று இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 43 கோடிக்கும் அதிகமானோருக்கு (43,26,05,567) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.இந்தியா
ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்புமருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, சுமார் 46 லட்சம் (45,74,298) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன
18-44 வயது பிரிவில் 22,80,435 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 2,72,190 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 13,77,91,932 பேர் முதல் டோசையும், 60,46,308 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 8020261 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 404270 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 248094 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 2075 பேர் இரண்டாம் டோசையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.