ட்விட்டரில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள்பரவப்பட்டது இதனை விசாரிக்கும் பிடி கேட்ட மத்திய அரசிற்கு சரியான முறையில் பதிலளிக்கவில்லை. ட்விட்டர் நிறுவனம் இதனால் மத்திய அரசுக்கும், அந்நிறுவனத்துக்கும் இடையே பெரும் பிரச்சினை உருவானது.
இந்த நிலையில் இந்தியாவில் ட்விட்டர் பறக்க ஆசை இல்லை போல தெரிகிறது. ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டு இருந்தது. . சென்ற வருடம் இதே தவறை செய்து – ஜம்மு காஷ்மீர் லடாக்கை சீனாவின் பகுதிகளாக காட்டி – மன்னிப்பு கேட்டது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பஜ்ரங்தள் தலைவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இண்டியாவின் தலைமை நிர்வாகியான மனீஷ் மஹேஷ்வரி மீது வழக்கு பதிவு செயப்பட்டது !ஏற்கனவே போலி செய்தி வெளியிட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்த விவகாரத்தில் ட்விட்ட இண்டியா (மனீஷ் மஹேஷ்வரி) மீது வழக்கு பதியப்பட்டது. முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார்.
தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகம் இந்திய சட்டத்தை அவமதித்து வருவதால், ட்விட்டர் இண்டியா சமீபத்தில் நியமித்த “grievance officer” தர்மேந்திரா சதுர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார் (ஒரே வாரத்தில்). ட்விட்டர் செய்யும் தவறுகளுக்கு இவர் சிறை செல்ல தயாராயில்லை போல தெரிகிறது.
இதே நிலை நீடித்தால், ட்விட்டர் இண்டியாவில் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். அத்தனை பேரும் ராஜினாமா செய்து வீட்டுக்கு போய்விடுவார்கள் என்றே தோன்றுகிறது.
ட்விட்டர் நிறுவனம் , சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதின் ட்விட்டர் பக்கத்தை ஒரு மணி நேரம் முடக்கினார்கள் சமீபத்தில். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: “2017இல் அவர் பகிர்ந்த பதிவு காப்பிரைட் சட்டத்துக்கு விரோதமானது” 2017 பதிவுக்கு ஏன் 2021இல் நடவடிக்கை? அப்படி நடவடிக்கை எடுப்பதனாலும் புதிய சட்டப்படி பதிந்தவரிடம் விளக்கம் கேட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கலாம் என்ற விதியை மீறியிருக்கிறார்கள். இதற்கும் ஒரு தண்டனை கிடைக்கும்.
ட்விட்டர் இது வரை பாஜக – ஆர்.எஸ்.எஸ் – இந்து தலைவர்களது பதிவுகளை மட்டுமே நீக்கியிருக்கிறது என்பதிலிருந்து, அது யாரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. . இந்த Tech Giantsதான் இக்கால கிழக்கிந்திய கம்பெனி! வணிகம் செய்ய வந்து அவன் சட்டத்தை நம் மீது புகுத்தினார்கள் கிழக்கிந்திய கம்பெனி அன்று. வணிகம் செய்ய வந்து அவன் சட்டத்தை நம் மீது புகுத்த முயற்சிக்கிறான் இந்த Tech Giants கிழக்கிந்திய கம்பெனி இன்று. அவர்கள் ஆசை நிறைவேறாது மோதி ஆட்சியில்.தவறான வரைபடத்தை வெளியிட்டால் அதற்கு ரூ 100 கோடி அபராதம் + 7 ஆண்டு சிறை என்ற சட்டம் உள்ளது.
மேலும் நைஜீரிய அரசு ட்விட்டர் சமூகவலைதளத்துக்கு தடை விதித்த மறுநாளேஇந்தியாவின் , ‘கூ’ செயலியின் பயன்பாடு, நைஜீரியாவில் மக்களிடையே அதிகரிக்க துவங்கியது. மேலும் கூ செயலியில் அந்த நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இது போல் இந்தியாவில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எண்டு தெரிகிறது.