பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் குறைக்கவில்லை திமுக தேர்தல் வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் அளவு குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து அரியணையில் ஏறினார்கள். மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பெட்ரோல் விலை குறைப்பு குறித்து திமுக அரசு எந்த வித அறிவிப்பும் விடவில்லை
பெட்ரோல் விலை ஏன் குறைக்கவில்லை என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் தமிழக அரசிடம் நிதி நிலைமை சரி இல்லை என தெரிவித்தார். மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் மட்டும் 2500 ரூபாய் கோடி செலவில் பூங்கா அமைக்கப்படும் என அமைச்சர் கே. என் நேரு கூறியது சமூக வலைத்தளத்தினை ஆக்கிரமித்துள்ளது
சென்னையில் 4 பூங்காக்கள் 2500 கோடி ரூபாய் செலவில் அமைக்கபடுகிறது. இந்த திட்டம் இப்பொழது அவசியமா என்று தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு தடுப்பனைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தடுப்பனை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. கரொனா வைரஸ் வந்ததால் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிக்கலாம். கடுமையான நிதிப் பற்றாக்குறையால் இந்தத் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளது. முதல்வர் அவர்களே கரொனா நிதி வழங்குகள் என்று எல்லோரிடமும் கோரிக்கை வைத்து கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு நிதி நெருக்கடியிலும் 2500 கோடி ரூபாய் செலவில் 4பூங்காக்கள் அவசியமா என்று தெரியவில்லை.