பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜூலை 7 அல்லது பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு பின் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.தற்போது பிரதமா் மோடியைத் தவிர மொத்தம் 53 மத்திய அமைச்சா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 81 வரை அதிகரிக்கலாம்.இதில் சிவசேனாவும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மகாராஷ்ட்ராவில் சிவேசான தலைமையில் தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த நிலையில் தேசியவாத காங்கிராஸை சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஊழல் புகாரில் சிக்கி பதவியை இழந்தார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரம், சிவசேனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவி வரும் நிலையில், பிரதமா் மோடியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், பாஜக பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷும் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனா்.
இந்தச் சந்திப்பின்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு இறுதிவடிவம் அளிக்கப்பட்டதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மஹாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அவர் பிரதமரிடம் மராத்தா இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிரச்னையை பற்றி அவர்கள் விவாதித்ததாக தகவல் வெளிவந்தது. ஆனால் கடந்த மாதம் பா.ஜ.க வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சரத்பவாரை திடீரென சந்தித்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை உத்தவ் தக்கரே சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதனால் மஹாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த சந்திப்பின் மூலம் சிவசேனா மீண்டும் பா.ஜ.க உடன் நெருக்கமாகிறதா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், “நாங்கள் அரசியல் ரீதியாக வேண்டுமானால் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக எங்கள் உறவு முறிந்துவிட்டதாக அர்த்தமில்லை.” என கூறினார்.மேலும் அக்கட்சியின் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பிரதமர் மோடி குறித்து பேசுகையில் கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அதன் வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர் தான் நாட்டுக்கும், அக்கட்சிக்கும் உயரிய தலைவர்.” என பேசினார்.
இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தில் மஹாராஷ்டிர ஆட்சியும் பாஜக வசம் வந்துவிடும் என்கின்றது டெல்லி வட்டரங்கள் ம ஹாராஷ்டிரா கூட்டணியில் நிலவும் நெருக்கடி குறித்து பிரதமரிடம் உத்தவ் விளக்கியதாக கூறப்படுகிறது. பா.ஜ.க – சிவசேனா கூட்டணியை மீண்டும் புதுப்பிப்பது குறித்து, இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.மீண்டும் கூட்டணி உருவானால், உத்தவ் தாக்கரேவின் நேரடி போட்டியாளராக கருதப்படும், பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க போவதாகவும், முதல்வர் பதவியில் உத்தவ் தொடருவதற்கு பிரதமர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.