டெல்லியில் மீண்டும் கலவரம் ஏற்படாத வண்ணம் துணை ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வட கிழ க்கு டெல்லி முழுவதும் வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சிறப்பு கமிஷன ராக எஸ்என் ஸ்ரீவாஸ்தவா நியமிக்கபட்டார். சி.ஆ.ர்பி.எப் ஏடிஜியாக உள்ள இவரை டெல்லி சட்டம் ஒழுங்கு கமிஷனராக பதவி அளித்து இருக்கிறார்கள் இவர் ஏற்றவுடன் முதல் வேலையாக கலவரங்கள் நடைபெற்று வரும் வட கிழக்கு டெல்லி மற்றும் யமுனா நதி பெல்ட் பகுதிகளில் கண்டதும் சுட உத்தரவு ஆர்டரை டெல்லி போலீஸ்
க்கு வழங்கினார். காஷ்மீரில் எப்படி விஜ செயல்பட்டாரோ அதே போல் இவர் இங்கு அஜித் தோவல் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கபட்டுள்ளார். என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆஜித்தோவல் டில்லியில் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலமாபூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரிசவுக் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். நகர் முழுவதும் வலம் வருகிறார். ஆப்ரேசன் காஷ்மீர் போல் ஆப்ரேசன் டெல்லி என்ற சிறப்பு வியூகத்தை அமைத்துள்ளாராம்.
டெல்லியில் தோவல் அளித்த பேட்டி: டில்லியில் போதுமான அளவு பாதுகாப்பு படையினர் பணியில் உள்ளனர். இதனால் யாரும் பயப்பட தேவையில்லை. சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன்கள், எந்த வகையிலும் துன்புறுத்தப்படமாட்டார்கள்.
டில்லி போலீசாரின் நோக்கம் மற்றும் தகுதி மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். சீருடை அணிந்தவர்களை மக்கள் நம்ப வேண்டும் என கூறினார். மேலும் மக்களிடையே ஒற்றுமை உணர்வு இருக்கிறது, பகை இல்லை. ஒரு சில கிரிமினல்கள் இது போன்ற செயல்களைச் செய்கிறார்கள். வன்முறையை பரப்புபவர்களை, மக்கள் தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
தோவல்
காவல்துறை அவர்களின் பணிகளை செய்கின்றனர். உள்துறை அமைச்சர் மற்றும்இந்திய பிரதமரின் ஆலோசனையில் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.இந்தியவை நேசிக்கும் ஒவ்வொருவரும், தங்கள் சமுதாயத்தையும், அண்டை வீட்டாரையும் நேசிக்கிறார்கள். எல்லோரும் மற்றவர்களுடன் அன்புடனும் இணக்கத்துடனும் வாழ வேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். என கூறியுள்ளார்.

ஆப்ரேசன் டெல்லி
கலவரம் ஏற்பட்ட இடத்தில இஸ்லாமியர்கள் ஷாகின் பாக் மாதிரி இன்னொரு தொடர் போராட்ட களத்தை உருவாக்க நினைத்து இருந்தார்கள்.அங்கு கலவரம் ஏற்பட்டு ராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது அடுத்த இலக்கு ஷாகின் பாக் தான்.
சிறப்பு அந்தஸ்து நீக்குவதற்கு முன் காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது,அதே போல் டெல்லியில் செயல்படுத்தவும் மற்றும் பிரிவினைகளை ஏற்படுத்தும் தலைவர்களை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தேவை ஏற்பட்டால் குடியரசு ஆட்சி டெல்லியில் அமைக்கவும்
திட்டமிட்டுள்ளனர்.இதனால் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















