மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் nta.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவனின் பிரச்சார முழக்கம் நீட் தேர்வு ரத்து, தான் சட்டமன்ற கூட்ட தொடரின் முதல் கையெழுத்து என திமுக தலைவர் பிரச்சாரம். நீட் தேர்வை எப்படி ரத்துசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அந்த ரகசியத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து காட்டுகிறோம். அடிமை அரசாக இருக்காது என உதயநிதியின் பில்டப் வேற லெவலில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக நீட் ரத்து செய்வார்கள் என மக்களை நம்ப வைத்தார்கள் திமுகவினர்.
நீட் தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லை என்று பலர் கூறி வந்தபோதிலும் திமுக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதியை தொடர்ந்து வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் சுகாதர துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியனிடம் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமைச்சர் நீட் தேர்வு ரத்து செய்யபட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. தேர்வெழுத சூழ்நிலை வந்தால் மாணவர்கள் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என குழப்பான பதிலை அளித்தார். நீட் தேர்வு நடப்பது நிச்சயம் மாணவர்கள் தயாராகுங்கள் என்பது தான் நிதர்சனம்