தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க 2026 சட்டமன்ற தேர்தலில் 150 எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்கும்.எனபது மிகவும் சாத்தியமான ஒன்று தான். பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது மோடி அரசின் திட்டங்களில் பயன்பெற்றவர்களின் வீடுகளின் கதவுகளை தட்டுவோம் என்கிறார். உண்மையில் அது நடக்குமானால் தமிழகத்தில் தாமரை மலரும். தற்போதும் தமிழக அரசியலில் வெற்று இடம் உள்ளது. கலைஞர் ஜெயலலிதா இல்லாதது அதற்கு காரணம். முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் மக்களை பெரிதும் கவரவில்லை.கலைஞர் இருந்திருந்தால் மத்திய அரசோடு இணக்கம் கொண்டிருப்பார்.முக்கிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து பெயர் பெற்றுவிடுவார்.
ஆனால் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசினை ஒன்றிய அரசு என கூறி தவறான பாதையில் சரியாக செல்கிறார். ஸ்டாலின் அவர்களோ இளைஞர்களிடம் ஆக்ரோஷமாக பேசினால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற சீமானின் அண்ணன் போல் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார். தற்போது மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை மக்களிடம் பாஜக கொண்டு வந்தது மத்திய அரசு செயல்படுத்தியது என சொல்வதற்கு ஸ்டாலின் அவர்கள் வழி அமைத்து கொடுத்துள்ளார். கோவையில் இது துவங்கி விட்டது. ரேஷன் கடைகளில் மோடி வழங்கும் இலவச அரிசி திட்டம் என்ற பேனர் வைக்கப்பட்டது இதற்கு காவல் துறை எதிர்ப்பு தெரிவித்து அந்த பேனரை அவிழ்க்க செய்தது, இதன் வீடியோ வைரலாக பரவியது , மோடி அரசின் இலவச தடுப்பூசி திட்டம் என பேனர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள் இது ஒரு சிறிய முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி தினமும் பா.ஜ.கவை பற்றி பேசாமல் இல்லை. தற்போது களம் மாறி கொண்டிருக்கிறது.தி.மு.க பா.ஜ.க என்று. இதுவே பா.ஜ.கவின் மிக பெரிய வெற்றி ஆகும். அது தான் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. 3 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள் அடுத்த தேர்தலில் 77 இடங்களுக்கு முன்னேறியுள்ளது . இதே நிலை தான் தமிழகத்தில் நடைபெறும். இன்னும் 5 வருடங்கள் உள்ளது பா.ஜ.க விற்கு மேலும் தற்போது புதிய இளம் தலைமை ஐ.பி.எஸ் அதிகாரி கர்நாடக மக்களால் தூக்கி கொண்டாடப்பட்ட அண்ணாமலை தலைமையில் இளைஞர்கள் பா.ஜ.கவை நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆளும் தி.மு.கவின் எதிர்ப்பு நிலை தமிழகத்தில் பாஜகவினை வளர செய்யும். அண்ணாமலை அவர்களிடம் பத்திரிக்கைக்காரர்கள் வேண்டுமென்றே கேள்விகளை கேட்டாலும், கோபப்படாமல், நிதானமாக கையாள்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! ஊடகங்கள் நெகடிவாக கவர் பண்ணினாலும், அதை தனக்கு சாதகமாக்கி சிக்ஸர் அடிக்கிறார். இம்மாதிரியான நெகடிவ் பேட்டிகள் வைரலாகி பாஜகவுக்கு பாசிடிவாக முடியும்.
இந்த நிலையில் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல வேண்டும். கிராமங்களில் பெண்களுக்கு என்று வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் சுய வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முத்ரா கடன் கொடுக்கப்படுகிறது. கிராமங்களில் ஜலசக்தித்துறை மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிநீர் உத்தரவாதம் கொடுக்கபட்டு அதை செயல்படுத்தப் படுகிறது.
ஏழை மக்களுக்கு இலவசமாக கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுபாட்டை போக்க சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக கருப்பு பைப் கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் உடனடி மின்சார வசதி பெற சோலார் மின் வசதி உடனுக்குடன் விவசாயிகளுக்கு தரப்படுகிறது. இதையெல்லாம் பாஜக தலைவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்தால் போதும் பாஜக தமிழகத்தில் வலுவான அமைப்பை பெற்றுவிடும்.