பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்தியா, தனது வான் பாதுகாப்பு மூலமாக முறியடித்தது. பாகிஸ்தானின் விமான தளங்களையும் பிரமோஸ் ஏவுகணை மூலமாக இந்தியா தாக்கியது. இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என ஆரம்பத்தில் பூசிமெழுகிய பாகிஸ்தான், தற்போது மெல்ல மெல்ல உண்மையை ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.
கடந்த 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்” என்று கூறினார்.
இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது இந்தியா தனது அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணையைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் சீக்கிரமே உடைந்து போக இந்த பிரம்மோஸ் ஏவுகணையும் ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கிடையே இந்த பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா இப்போது 5 கலக்கல் திட்டங்களைப் போட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியா பாகிஸ்தான் மோதல் கடந்த மாதம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சில நாட்களில் சரணடைந்தது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் வெற்றிக்கு பிரம்மோஸ் ஏவுகணை தான் மிக முக்கியமான பங்கு வகித்தது. இதுவே பாகிஸ்தான் சீக்கிரம் சரணடையக் காரணமாக இருக்கிறது.
பிரம்மோஸ் ஏவுகணை
பிரம்மோஸ் என்பது ஒரு சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையாகும். இது ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. மேலும், 400 கிமீ-க்கு அப்பால் இருக்கும் இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக இது இருக்கிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையை டெவலப் செய்துள்ளது. இப்போது இந்த பிரம்மோஸ் ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டபோது இந்தியா பிரம்மோஸ் ஏவுகணையைக் கொண்டே பாகிஸ்தானைத் தாக்கியது. அவர்களால் நமது பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியவில்லை.
சீனா வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி தாக்குதல்
இதில் விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானிடம் சீன வான் பாதுகாப்பு அமைப்பு இருந்தது. ஆனாலும் அவர்களால் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதுவே பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. இதற்கிடையே பிரம்மோஸ் ஏவுகணையை வைத்து இந்தியா போடும் சில திட்டங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
5 பிளான்கள்
1) இப்போது பிரம்மோஸ் ஏவுகணையால் 400 கிமீ வரை மட்டுமே சென்று தாக்க முடிகிறது. இதற்கிடையே 800 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு பிரம்மோஸ் வெர்ஷனை டெவலப் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
2) மேலும், இப்போது வரை பிரம்மோஸ் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவ முடியாது. ஆனால், அப்படி நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் ஏவக்கூடிய ஒரு வேரியண்டையும் இந்தியா டெவலப் செய்து வருகிறது. மிகச் சீக்கிரமே அது தொடர்பாகச் சோதனை நடத்தப்படும் என்றும் அது விரைவில் பாதுகாப்புப் படையிலும் இணைத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
மினி பிரம்மோஸ்
3) ரஃபேல் உள்ளிட்ட சில வகை ஜெட் விமானங்கள் எளிதாக பிரம்மோஸ் ஏவுகணையை எடுத்துச் செல்லும் வகையில் ஒரு மினி சைஸ் பிரம்மோஸ் வெர்ஷனையும் உருவாக்கும் பணிகளில் நமது ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
4) இப்போது பிரம்மோஸ் ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு மட்டுமே வேகமாகச் செல்லும். ஆனால், ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் பிரம்மோஸ் திட்டமும் செயல்பாட்டில் இருக்கிறது. அது இந்திய பாதுகாப்புப் படையின் துல்லியம் மற்றும் தாக்குதல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏற்றுமதி திட்டம்
5) இப்போது வரை இந்தியா தனது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மட்டும் வழங்கியுள்ளது. இதற்கிடையே வியட்நாம் உட்படப் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் கூட பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் கூட விரைவில் ஆரம்பிக்கும் என்றே தெரிகிறது.