வானதி சீனிவாசன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஜூனியர் விகடனில் வாக்குறுதி என்ன ஆனது முதல்வர் அவர்களே என பதிவிட்ட புகைப்படத்தினை மேற்கோள் காட்டி ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்
அந்த பதிவானது கூல் லிப் என்ற பெயரில் போதை பொருள்களை பள்ளி மாணவர், மாணவியருக்கு விற்று சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாக்கும் ஆபத்தான போக்கு தமிழகம் முழுக்க இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். அதே போல கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள் பயன்பாடு மிக அதிக அளவில் இருக்கிறது. சென்னை, கோவை போன்ற மெட்ரோ நகர்களில் மட்டுமல்ல, சிறு சிறு நகரங்களில் கூட போதை மருந்து புழக்கமும் நடமாட்டமும் அதிகரித்திருக்கிறது. இதனால் கொடூரமான வழிப்பறி, கொலை முதல் செயல் திறனற்ற இளம் சமுதாயமும் உருவாகிறது. அரசாங்கம் இதற்கு சிறப்பு கவனம் கொடுத்து போதை பொருள் பயன்பட்டை முழுதும் தடுத்து நிறுத்த உடனே ஆவண செய்ய வேண்டும்.
மாவட்டம் தோறும் போதை மறுவாழ்வு மையங்கள், உள சிகிச்சை ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் ஒழிப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர் இன்னும் அதிக கவனத்தோடு கண்காணித்து போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். இதை ஒருங்கிணைந்த வகையில் அரசாங்கம் செய்து இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் . என பதிவிட்டுள்ளார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















