“பாடப் புத்தகங்களில் இருக்கும் வரலாற்று பிழைகளை சரிசெய்வதா?. கூடாது” என ‘வரலாற்றுப் பிழைகளை’ புத்தகங்களில் கொண்டுவந்த ரொமிலா தாப்பர் ஆய்வாளர் மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளது.2019 இல் மத்திய அரசு, “NCERT பாடப்புத்தகங்களை 14 ஆண்டுகளுக்கு பிறகு சரி செய்யப்போகிறோம்” என்ற போதும், ஜனவரியில் மத்திய அரசு, “நம் பாடப்புத்தகங்கள் ஆக்கிரமிப்பாளர்களான முகலாயர்களை புகழ்ந்தும், இந்திய மன்னர்களான சேர சோழ பாண்டியர்களை உதாசீனம் செய்தும், வரலாற்றை திரித்தும் பேசுகிறது. அவற்றை சரி செய்ய வேண்டும். உங்கள் கருத்துகளை பகிரவும்” என மக்களிடம் கேட்ட மத்திய அரசு. “இதெல்லாம் நடக்காது” என்று அலட்சியமாக இருந்து விட்டனர் இந்த ரொமிலா தாப்பர் வரலாற்று ஆய்வளர்கள் கூட்டத்தினர்.
ஆனால் பாடபுத்தங்களில் ஜூலை 15க்குள் மக்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என மத்திய அரசு கூறியதும் பதறுகின்றனர். உடனடியாக ரொமிலா தாப்பர் போன்ற ஆய்வாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்: “இது தவறு” என்று. உண்மையை சொல்வது தவறு என்கிறது இந்த ரொமிலா தாப்பர் ஆய்வாளர் கூட்டம்.
ஜெர்மனியில் ஒரு சட்டம் உள்ளது, “நாட்சி ஹிட்லர் யூதர்களை கொன்றதை பொய் என்று சொல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.” என. எனவே, ஜெர்மனியில் எவரும் யூத படுகொலை பொய் என்று சொல்வதில்லை.
இந்தியாவில் இந்துக்கள் படுகொலைகள் – முகலாய மற்றும் கிழக்கிந்திய கம்பெனி செய்த படுகொலைகள் – கால காலமாக மறைக்கப்படுகின்றன. அவற்றை நியாயப்படுத்தும் விதமாகவும் திரித்து வருகின்றனர் இந்தக் கூட்டத்தினர்.
தகவலறியும் சட்டம் மூலம், “இந்து கோவில்களுக்கு முகலாய அரசர்கள் நன்கொடை கொடுத்தனர் என NCERT புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது பொய்” என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்துக்களை கொன்று குவித்த அக்பரை “தி கிரேட்” ஆக்கிவிட்டனர். ஔரங்கசீப், திப்பு சுல்தான் செய்த கொலைகள் கணக்கிலடங்காது.
“துருக்கியில் மீண்டும் கலிஃபா ஆட்சி வர வேண்டும். அந்த போராட்டத்தில் இந்துக்களும் பங்கெடுக்க வேண்டும்” இதற்குஒத்துழைக்காத இந்துக்கள் கேரளாவில் கொல்லப்பட்டனர். அதை “பிரிட்டிஷாருக்கு எதிராக மாப்ளா கலவரம்” என திரித்து விட்டனர். இதுபோல் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கிறது. இந்த உண்மைகள் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் மத்திய மோடி அரசு உறுதியாக உள்ளது. புத்தகங்கள் உண்மையை பிரதிபலிக்க வேண்டும். அதற்கான மாற்றங்கள் வருகின்றன.
மது NCERT புத்தகங்களில் அக்பர் பற்றி 97 விவரங்களும், ஷா ஜஹான் பற்றி 30, ஔரங்கசீப் உள்ளிட்ட பல கயவர்களின் விவரங்கள் ஏராளமாகவும் உள்ளன. ஆனால், சத்திரபதி சிவாஜி, ரானா பிரதாப் சிங் போன்றவர்கள் பற்றிய விவரங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. ஆக்கிரமிப்பு செய்த முகலாயர்களை போற்றும் விஷயங்களை நீக்கி, இந்தியாவின் மன்னர்களையும், வேதங்களின் சிறப்பு – மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் இந்திய பாரம்பரியங்களின் சிறப்பு பற்றி விவரிக்க வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது.