காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து ஓடினார். விஜய் மல்லையாவை, இந்தியாவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசு பல சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வந்தது. இந்த நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கும்படி அவருக்கு கடன் கொடுத்த, 13 வங்கிகள் பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு செய்தன. விசாரணையின் இறுதியில் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மால்லயாவை திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்துவிஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவருக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்,அந்த பதிவில் 6,200 கோடி ரூபாய்க்கு கடனுக்காக, 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்கிறது என்றார். அமலாக்க துறைக்கு பணத்தை திருப்பித் தர வேண்டியிருப்பதால் வங்கிகள் அவரை திவாலாக்குகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
விஜய் மல்லையாவிற்கு கடன் வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கூட்டமைப்பை சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் அவருக்கு எதிராக வழக்கு நடத்தி வருகின்றன. விஜய் மால்யா வாங்கிய கடனுக்கு, ஜூன் 25, 2013 முதல், 11.5 சதவீத கூட்டு வட்டியின் அடிப்படையில் வட்டித் தொகை கணக்கிடப்பட்டு கடன் தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.