தி.மு.க வெற்றி பெற்றததுக்கு காரணம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களோ மறைந்த கருணாநிதியோ திமுகவினரோ இல்லை. தி.மு.க வெற்றிக்கு முழுக்க முழுக்க சிறுபான்மை மக்களே காரணம் என சிறுபான்மையின தலைவர்கள் பேசி வருகிறார்கள்.380 கோடி கொடுத்து தி.மு.க விற்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கிய பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்கு காரணம் இல்லை.
தி.மு.க வெற்றி பெற்றதற்கு நாங்கள் போட்ட பிச்சை என கிறிஸ்துவ பாதிரியார் கூறினார். அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தது கழகம். ஜமாத்தில் இமாம்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று இஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் மதபோதகர் ஒருவர் பேசியுள்ளார்.
தற்போது இந்த இரு பேச்சையும் ஆம் என்று சொல்லும் வகையில் திமுக அமைச்சரே பேசியுள்ளார். திமுக வெற்றிக்கு கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபம் தான் காரணம் என சொல்லியுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தின், 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய , பால்வளத்துறை அமைச்சர் நாசர்: கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தலைமை கழகத்தில் இருந்து இந்த பேச்சிற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு முன் அமைச்சர் பெரியசாமியின் மருமகள் மெர்சி கன்யாகுமரியில் இந்துக்களை தரம் குறைந்து பேசிய பாதிரியார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த கையோடு பாதிரியாரை கைது செய்ய போப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு சட்டம் இயற்றவேண்டும் என குண்டை தூக்கி போட்டார். இதற்கும் கடும் கண்டங்கள் எழுந்தது.
திமுக அமைச்சர்கள் திமுக ஆதரவு சிறுபான்மை இயக்கங்கள் தொடர்ந்து இந்து மதத்தை புண்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தேவாலயம் நிகழ்ச்சிக்கு சென்று அவர்கள் ஜெபம் தான் திமுகவை ஜெயிக்க வைத்தது என பேசினார். இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது
இந்த நிலயில் அவர் அளித்த பேட்டியில் கிறிஸ்துவர், முஸ்லிம் என்ற எந்தவிதமான இன, மொழி, மதப் பாகுபாடும் பார்க்காமல், நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் செல்கிறோம். அங்கு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசுகிறோம். கிறிஸ்துவ நிகழ்ச்சி என்பதால், கூடியிருந்த கிறிஸ்துவர்களின் சந்தோஷத்துக்காக சில விஷயங்களைப் பேசினேன்.
கிறிஸ்துவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துவ மக்களின் ஜெபம் அத்தனை வலிமையானது. ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் மிக முக்கிய காரணம், கிறிஸ்துவர்களின் ஜெபம் தான்’ என, கூடியிருந்த மக்களின் உற்சாகத்துக்காக பேசினேன். கிறிஸ்துவர்களின் உற்சாகத்துக்காக பேசியது தான் பரபரப்பாகி, சர்ச்சையாகி இருக்கிறது. திட்டமிட்டு இதைப் பேசவில்லை. இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















