எப்பொழுதும் அதிரடியாக செயல்பட்டு மற்றவரை மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யப்பட வைக்கும் முதல்வர் உ.பி முதல்வர் யோகி தான்! அதிரடி என்றாலும் சரவெடி என்றாலும் நடவடிக்கை என்றாலும் இவருக்கு தனி ஸ்டைல் உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதேசம் ஆகும் அங்கு சுமார் 23 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். யோகி ஆட்சி வந்தபிறகு மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.பா.ஜ.க ஆட்சிக்கு முன்பு ரவுடிகளின் கூடாரம் என அழைக்கப்பட்டது உத்திர பிரேதேசம் தற்போது தொழிற்சாலைகளின் கூடாரம் என அழைக்கப்படும் அளவிற்கு ஆட்சி செய்து வருகிறார் யோகி. ஆத்யநாத்.
உ.பி.யில் மாவட்டங்களை பிரித்துக் கொண்டு, அரசுக்கு போட்டியாக இவர்கள் நிழல் ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர்.தாதாக்களை கட்டுப்படுத்த தாதா கும்பல்களிடம் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தில் ரவுடிசத்தை அடுக்குவதற்கு புதிய முறையை கையாள்கிறார் யோகி, ரவுடிகளின் சொத்துக்களை முடக்குகிறார். தாதாக்கள் பங்களாக்களை இடித்து தரைமட்டம் ஆக்குகிறார்.
இது குறித்து உ.பி., மாநில டி.ஜி.பி.,பிரசாந்த் குமார் கூறியதாவது:கடந்த 2017 ஏப்ரல் மாதம் முதல், இந்தாண்டு ஜூலை வரை சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 43,294 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 630 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் மற்றும் மாபியாக்களின் பின்னணியை உடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறைகேடாக சேர்த்திருந்த 1,848 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. என கூறியுள்ளார்.