தமிழகத்தின் தேசப்பற்று என்பது பல தலைவர்களுக்கு கிடையாது. ஏன் முதலவர் ஸ்டாலின் முதல் நாம் தலைவர் சீமான் வரை பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேசப்பற்று என்பது எந்த அளவில் உள்ளது அவர்களின் பேச்சுகளிலும் நடக்கும் விதங்களிலும் தெரியும். தமிழகத்தில் சுதந்திரத்திற்கு போராடிய பல தேச தலைவர்கள் மத்தியில் திராவிடம் தனி தமிழ்நாடு பேசி இன்றைய தலைமுறையினர் மனதை குழுப்பிவருகிறார்கள் தேச விரோத சக்திகள்
தமிழன் என்று பேசுபவர்கள் தமிழன் கலாச்சாரத்தினை பின்பற்றாதவர்கள் தான் அதிகம். தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதவர்கள் தான் தமிழன் என கூறி பிரிவினைவாதத்தை உருவாக்குகிறார்கள்.
இதற்கு காரணம் வெளிநாட்டில் இருந்து வரும் பணம் தான் அனைத்திற்கும் காரணம் என்கிறது ஒரு தரப்பு.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமுருகன் காந்தி, இன்னும் பல போலி போராளிகள் உட்பட பலர் மேடை கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்தியா குறித்தும் அதன் வலிமையை குறைத்தும் மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள் என்பது அனைவரின் பார்வையாக இருந்து வருகிறது.
பாகிஸ்தான் மீது கை வைக்கும் இந்திய ராணுவத்தால் சீனா மீது கை வைக்க முடியுமா என்று இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், உழைப்பையும், கொச்சைப்படுத்தி இங்கேயே வாழ்ந்து மேலும் தேசிய கீதம் பாடினால் எழுந்திரிக்க மாட்டோம் மரியாதை செலுத்த மாட்டோம் என இருக்கும் சில நபர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக தேசிய கீதத்தின் புனிதத்தை உணர்ந்த சிறுவன் ஒருவன் தனது உணர்வை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்தாவது தமிழக போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அரசியலைப்புக் குழு 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதியன்று “ஜனகனமன” என தொடங்கும் பாடலை தேசிய கீதமாக அறிவித்துள்ளது. இந்தப் பாடல் எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாடப்படும். தேசிய தேசிய கீதம் கீதம் 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என்று விதியே இருக்கிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே அரசு நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்கும் பொழுது அந்த வழியே சைக்கிளில் சென்ற சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தேச பற்று என்பது தமிழ் மண்ணிற்கு உரித்தான ஒன்று என்பதை சிறுவன் உணர்த்தியுள்ளான்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















