பிரதமர் மோடி அரசு தலைமையிலானா மத்திய அரசு ஆட்சி பொறுப்பிலேறிய பின்பு நாட்டிற்கு எதிராக செயல்படும் குற்றவாளிகளை ஒடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளது.
மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றங்கள் குறித்தத் தரவுகளைத் தொகுக்கும் தேசிய குற்ற ஆவண அலுவலகம், ‘கிரைம் இன் இந்தியா’ எனும் அதன் வருடாந்திர வெளியீட்டில் அத்தகவல்களை வழங்குகிறது.
இதன் படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ம் அண்டில் 1554 பேரும், 2018-ம் ஆண்டில் 1421 நபர்களும், 2019-ம் வருடத்தில் 1948 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (2019), 2019 டிசம்பர் 12 அன்று அறிவிக்கப்பட்டு, 2020 ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்திய குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டைத் தயாரிப்பதற்கான எந்த முடிவையும் அரசு இதுவரை எடுக்கவில்லை. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தொடர்பான நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















