நீதிமன்றங்களின் வழக்கு மேலாண்மை மென்பொருள் (case management system of courts) மூலம் வணிக நீதிமன்றங்கள் (commercial courts) முதல் இந்தியாவெங்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் வேலையை தொடங்கியுள்ளது மத்திய அரசு.
மூன்று முறைக்கு மேல் (three-adjournment rule) வழக்குகளை நீதிபதி ஒத்திவைத்தால், இந்த மென்பொருள் தாமாகவே எச்சரிக்கையை (alert) உருவாக்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிப்படி, 3 முறைக்கு மேல் ஒத்திவைக்க கூடாது என்று இருந்தாலும், அதை எந்த நீதிபதியும் கடைப்பிடிப்பதில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இண்டியா.
கீழ்க்கோர்ட்டுகளில் 3.9 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. 2018இல் இந்த எண்ணிக்கை 2.9 கோடி எனவும், அவற்றை தீர்த்து வைக்க 324 வருடங்கள் பிடிக்க்கும் என்று கணக்கிட்டிருந்தது அரசு.
நீதி வழங்கல் அமைப்பில் “வணிகத்தை எளிதாக்குதல்” சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஒரு வழக்கில் வழங்கப்பட்ட ஒத்திவைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து முதல் முறையாக நீதிபதிகள் பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு குறிகாட்டிகளைப் பெறுவார்கள்.
இந்த குறியீட்டின் அடிப்படையில் நீதிபதிகளின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒரு நீதிபதியை உயர் நீதிமன்றங்களுக்கு உயர்த்தும் போது ஒத்திவைப்பு பதிவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். என கூறப்படுகிறது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரசுக்கு ஏற்படும் செலவினங்கள் அதிகமாகி கொண்டே செல்கிறது. உலக வங்கியின் “சுலபமாக வியாபாரம்” தரவரிசையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்த இந்த நடவடிக்கை நோக்கமாக உள்ளது.
இந்த புதிய சட்டமானது வணிக நீதிமன்றங்களில் தொடங்கி, இந்தியா முழுவதும் உள்ள வணிக நீதிமன்றங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும். மேலும் இந்த சட்டம் நீதிபதிகள் வழக்குகளை ஒத்தி வைப்பதை கண்காணிக்கும். 3 முறைக்கு மேல் ஒத்தி வைத்தால் நீதிபதிகளுக்கு மூன்று ஒத்திவைப்பு விதி”யை மீறப்படுகிறது என எச்சரிக்கை செய்தி நீதிபதிகளுக்கு செல்லும். இதெற்கென தனி வெப்சைட் உருவாகக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சைட்டில் அனைத்து வழக்குகளும் பதிவேற்றம் செய்ப்பட்டு கண்காணிக்கப்படும்.