Saturday, September 23, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Oredesam by Oredesam
January 1, 2021
in இந்தியா, செய்திகள்
0
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.  மலிவான, நிலையான வீட்டு வசதித் திட்டத்தின் ஊக்குவிப்பாளர் (ஆஷா-இந்தியா) திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்களை அவர் அறிவித்தார் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அவர் ஆண்டு விருதுகளை வழங்கினார்.  இந்திய வீடுகளுக்கான  புதிய, மலிவான, சரிபார்க்கப்பட்ட, ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் படிப்பையும் (நவரித்) அவர் வெளியிட்டார். மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர்கள் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  புதிய தீர்வுகளை நிருபிக்க, புதிய சக்தியுடன் முன்னேறும் நாள் இது எனவும், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வீடுகள் கட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பெறும் நாள் எனவும் கூறினார்.   தொழில்நுட்ப மொழியில், இந்த வீடுகள், சிறிய நவீன வீடுகள் திட்டம் என அழைக்கப்படுகிறது.  ஆனால் இந்த ஆறு திட்டங்களும் உண்மையிலேயே கலங்கரை விளக்கம் போல், நாட்டில் வீட்டு வசதித் துறைக்குப் புதிய திசையைக் காட்டும்.

READ ALSO

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

இந்த சிறிய வீடுகள் திட்டம், தற்போதைய அரசின் அணுகுமுறைக்கு உதாரணமாக உள்ளன என பிரதமர் கூறினார்.  ஒரு காலத்தில் வீட்டு வசதித் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும், தரத்திலும், நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.  இன்று, திட்டங்களை விரைவாக முடிக்க, நாடு வேறு அணுகுமுறையைத் தேர்வு செய்து, மாற்று வழியையும், சிறந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றுகிறது. அரசின் அமைச்சகங்கள் மந்தமான பெரிய அமைப்புகளாக இல்லாமல், புதிய நிறுவனங்கள் போல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட புதுமையான கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.  இந்த உலகளாவிய போட்டி, புதுமை மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் வளரும் வாய்ப்பை அளித்துள்ளது என அவர் கூறினார்.

இன்றிலிருந்து ஆறு வெவ்வேறான இடங்களில் இருந்து ஆறு சிறிய வீடுகள் கட்டும் திட்டம் தொடங்குகிறது என பிரதமர் கூறினார். இந்த சிறிய வீடுகள் திட்டம், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை முறையால் உருவாக்கப்படும் எனவும், இது கட்டுமான காலத்தைக் குறைக்கும் எனவும், ஏழைகளுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கும் எனவும் பிரதமர் கூறினார். இந்த வீடுகளின் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புதுமை இருக்கும் என அவர் கூறினார்.  உதாரணத்துக்கு, இந்தூரில் கட்டப்படும் வீடுகள் திட்டத்தில், செங்கல் மூலம் சுவர்கள் உருவாக்கப்படாது. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் இணைப்புகளாக அவை இருக்கும்.  ராஜ்கோட்டில் கட்டப்படும் சிறிய வீடுகள், பிரெஞ்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன. அவை குகைத் தொழில்நுட்ப முறையில் கான்கிரீட் மூலம் உருவாக்கப்படும். இது பேரிடர்களைத் தாங்க கூடியதாக இருக்கும்.  சென்னையில், அமெரிக்க மற்றும் பின்லாந்து தொழில்நுட்பத்தில், கான்கிரீட் மூலம் முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட பாகங்களை இணைக்கும் முறையில் வீடுகள் விரைவாகவும், மலிவாகவும் கட்டப்படுகின்றன.   ராஞ்சியில் கட்டப்படும் வீடுகளில் ஜெர்மன் நாட்டின் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு அறையும், தனியாக உருவாக்கப்பட்டு, பொம்மை இணைப்பு வடிவங்களைச் சேர்ப்பது போல  ஒன்றாகச் சேர்க்கப்படும். அகர்தலாவில் கட்டப்படும் வீடுகள், நியூசிலாந்து தொழில்நுட்பத்தில் எஃகுச் சட்டங்களைப் பயன்படுத்திக் கட்டப்படும். இது பெரிய நிலநடுக்க அபாயத்தை தாங்க கூடியது. லக்னோவில் கனடா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிளாஸ்டர் மற்றும் பெயின்ட் தேவை இல்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுவர்கள் மூலம் இந்த வீடுகள் விரைவாகக் கட்டப்படும்.  ஒவ்வொரு இடத்திலும் 12 மாதத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும்.  ஒவ்வொரு இடமும் நமது திட்டத் தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு புதிய தொழில்நுட்பத்தையும், அனுபவத்தையும் கற்கும் மையமாக இருக்கும்.  இத்துடன், கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான திறனை மேம்படுத்த சான்றிதழ் படிப்பும் தொடங்கப்படும் எனவும்  அப்போது தான், வீடு கட்டுமானத் துறையில், உலகின் சிறந்த தொழில்நுட்பம் மற்றம் பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் அவர் கூறினார். 

நம்நாட்டில் நவீன வீட்டுவசதித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்க ஆஷா – இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார். இதன் மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய மற்றும் மலிவான கட்டிடத் தொழில்நுட்பம் நாட்டில் உருவாக்கப்படும். இந்தப் பிரசாரத்தின் கீழ், ஐந்து சிறந்த தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார். நகரத்தில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப் பெரிய கனவு சொந்த வீட்டில் வசிப்பதுதான் என அவர் கூறினார்.  ஆனால், பல ஆண்டுகளாக, சொந்த வீட்டின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வந்தனர். நம்பிக்கை ஏற்பட்டாலும், அதிக விலை காரணமாக , வீடு வாங்குவது குறைந்தது. சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதாலும், மக்கள் நம்பிக்கை இழந்தனர். வங்கியின் அதிக வட்டி, வீட்டுக் கடன் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை  வீடு வாங்கும் ஆர்வத்தை மேலும் குறைத்தன. சாதாரண மனிதரும் சொந்த வீடு பெற முடியும் என்ற நம்பிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளில் மீண்டும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகரங்களில், இலட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

புதுமை, உள்ளூர்த் தேவை, வீட்டு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளை அமல்படுத்துவது ஆகியவற்றில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கவனம் செலுத்தியது என பிரதமர் கூறினார். ஒவ்வொரு வீடும் மின்சாரம், தண்ணீர், கேஸ் இணைப்பு பெற்ற வீடாக உள்ளது.  ஜியோ-டேக்கிங் மற்றும் பயனாளிகளுக்கு நேரடிப் பணப்பரி மாற்றத்தின் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

நடுத்தர மக்களின் பலன்கள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, வீட்டுக் கடன்களுக்கு அவர்கள் வட்டி மானியம் பெறுவதாக திரு. மோடி கூறினார்.  கட்டி முடிக்கப்படாத வீட்டு வசதித் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டது. இது நடுத்தர மக்களுக்கு உதவும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்ற நடவடிக்கைகளும், வீட்டு உரிமையாரளர்கள் இடையே, தாங்கள் ஏமாற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் 60 ஆயிரம் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

வீட்டுச் சாவியைப் பெறுவது, வீட்டைப் பெறுவது மட்டும் அல்ல, அது, கௌரவம், நம்பிக்கை, பாதுகாப்பான எதிர்காலம், புதிய அடையாளம் மற்றும் விரிவுபடுத்தும் சாத்தியங்களுக்கான கதவுகளையும் திறக்கிறது என பிரதமர் கூறினார்.  அனைவருக்கும் வீடு என்ற அனைத்து கட்டப் பணி நடப்பது, கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

கொரோனா தொற்று காலத்தில் எடுக்கப்பட்ட மலிவு வாடகை வீட்டு வசதித் திட்டங்களையும்  பிரதமர் குறிப்பிட்டார். பல மாநிலங்களில் இருந்து வேலை செய்ய வரும் தொழிலாளர்களுக்கு நியாயமான வாடகையில் வீடுகளை வழங்க தொழில்துறை மற்றும் இதர முதலீட்டாளர்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.  அவர்களின் வீட்டு நிலைமை சுகாதாரமற்றதாகவும், மோசமானதாகவம் உள்ளன. அவர்கள் பணியாற்றும் இடங்களில் நியாயமான வாடகைக்கு வீடு வழங்கும் முயற்சிகள் நடக்கின்றன. நமது தொழிலாள நண்பர்களும் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பது நமது பொறுப்பு என திரு. மோடி கூறினார்.

ரியல் எஸ்டேட் துறைக்கு உதவ சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  மலிவான வீடுகளுக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்தது, ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தது, எளிதான கடன்கள் பெற கட்டமைப்புத் துறையாக அங்கீகரித்தது போன்ற நடவடிக்கைகள், கட்டுமானத்திற்கான அனுமதி தரப் பட்டியலில் 185 வது இடத்திலிருந்து 27வது இடத்துக்கு கொண்டு சென்றது. 2000க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டுமான அனுமதிக்கான நடைமுறைகள் இணையத்தின் மூலம் மூலம் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் கூறினார். 

ஊரகப் பகுதிகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த ஆண்டு கிராம வீடுகளை விரைந்து முடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ShareTweetSendShare

Related Posts

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
செய்திகள்

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

September 22, 2023
மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
இந்தியா

மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.

September 22, 2023
சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
செய்திகள்

சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..

September 19, 2023
“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !
இந்தியா

“இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

September 19, 2023
காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்
அரசியல்

காவிரி பிரச்னை தொடர்பாக சித்தராமையாவுடன் பேச்சு நடத்துங்கள்; ஸ்டாலினுக்கு பா.ஜ., – எம்.பி., கடிதம்

September 19, 2023
கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !
அரசியல்

கோபாலபுரத்தில் ஒரு மாமன்னரும், மாவட்டந்தோறும் குறுநில மன்னர்களாலும் நடத்தப்படும் கட்சி தான் திமுக அண்ணாமலை அதிரடி !

September 18, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

April 21, 2020
கங்கனா ரணாவத்க்கு ஆதரவு! தமிழக பா.ஜ.க விற்கு தூது விடும்  சண்டக்கோழி நாயகன்!பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

கங்கனா ரணாவத்க்கு ஆதரவு! தமிழக பா.ஜ.க விற்கு தூது விடும் சண்டக்கோழி நாயகன்!பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

September 14, 2020

திமுக நிர்வாகியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…

August 24, 2020
காமவெறி பிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் !

காமவெறி பிஷப் பிராங்கோ மீது மேலும் ஒரு கன்னியாஸ்திரி பாலியல் புகார் !

February 22, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !
  • மீண்டும் அரங்கேரிய ‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற போலீசார்.
  • சுடலையாண்டவர் கோவில் சிலை உடைப்பு ! மர்ம நபர்கள் வெறிச்செயல்..
  • “இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்”- மாநிலங்களவையில் பிரதமர் மோடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x