கோயம்பத்தூரில் சாதிய வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்கலாம் என நினைத்த கிராம நிர்வாக அலுவலருக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் குதித்துளார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான கொடுமைகள், வன்முறைகள்,
துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.
இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் பட்டியலின மக்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சட்டத்தை பல நபர்கள் தவறான முறையில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையை அடுத்த அன்னூர் ஒட்டர்பாளையத்தினை சேர்ந்த விவசாயி கோபால் சாமி தனது தந்தை நிலத்தின் பட்டா மோசடி தொடர்பாக கிராம் நிர்வாக அலுவகத்திற்கு சென்றுள்ளார். கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் உள்ளார்கள்.
தனது தந்தை பெயரில் இருந்த பட்டாவை தனது பெரியாப்பா பெயருக்கு முறைகேடாக மாற்றிக்கொடுத்து விட்டீர்களா என விவசாயி கோபால் சாமி கேட்க உடனே கிராம நிர்வாக அலுவல் உதவியாளர் முத்துசாமி அவரை தாக்கியுள்ளார்.
தாக்கியது மட்டுமல்லாமல் கோபால் சாமியை தகாத வார்த்தைகளால் கூறி தரையில் உட்கார வைத்து அவமனப்படுத்தியுள்ளார். கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி
கோபால் சாமியுடன் வந்திருந்த விவாசயிகள் இதை பார்த்துள்ளார்கள். இதனால் சுதாரித்து கொண்ட முத்துசாமி தீடிரென விவசாயி கோபால் சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நாடகம் நடத்தினார்.
பின்னர் காலில் விழும் அந்த வீடியோவை, பட்டியல் இனத்தவரை காலில் விழவைத்து கொடுமைபடுத்துவதாக, கூறி வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டனர்.
இந்த வீடியோவை கண்டு பொங்கியவர்கள் கோபால் சாமியை கைது செய்ய கூறி போராட்டம் செய்தார்கள். கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியும் இதற்கு உடந்தையாக இருந்தார். மேலும் சாட்சியமும் அளித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார் .பின் விவசாயி மீது சாதிய தீண்டாமை வன்கொடுமை வழக்கும், அரசு அதிகாரியை பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் மற்றொரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விவசாயி கோபாலசாமியை கிராம நிர்வாக அலுவலர் முத்துசாமி தாக்கிய வீடியோ அது.
விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து பிரச்சனையை திசை திருப்பிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததால், அந்த கிராம உதவியாளர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, விவசாயியை அடித்த கிராம உதவியாளர் முத்துச்சாமி, அதற்கு உடந்தையாக இருந்த வி.ஏ.ஓ கலைச்செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அன்னூர் வட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கோபால்சாமி மீது பொய்வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்
இதில் தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
விவசயிகளின் போராட்டத்தின் போது பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சாதி மோதல்களை உண்டாக்கும் வகையில் கிராம நிர்வாக உதவியாளர் முத்துச்சாமி மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் வீடியோ எடுத்த நபர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய விவசாய சங்கத்தினர், முத்துசாமி மற்றும் விஏஓவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது போதாது என்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் மேலும் இருவரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்,
மேலும் காவல்துறையினர் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதற்கிடையே விவசாயியை தாக்கி விட்டு , காலில் கும்பிட்டு விழுந்து சாதியை வைத்து நாடகம் போட்ட கிராம உதவியாளர் முத்துச்சாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















