தமிழக அரசு ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தலைவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வை வழங்கியது போல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக எந்தவித பொருளாதார காரணங்களையும் முன்வைக்காமல், அகவிலைப் படியை 28 சதவீதத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
இதனை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்துக்கு தனி துறையை அமல்படுத்த வேண்டும், என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக உள்ள முக.ஸ்டாலினை கடந்த ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட நெருக்கடி, குளறுபடிகளை அடிக்கடி சந்தித்து, சங்கங்களின் கோரிக்கை தெரிவித்து வந்தோம்.
ஆனால் முக.ஸ்டாலின் முல்வரான பிறகு, சந்திக்க வேண்டும் என கடிதம் கொடுத்தும், சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, மூன்று முறை, அமைச்சர்கள், முதன்மை செயலாளரிடம் கடிதம் கொடுத்தும், எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை.
முதல்வரையும் சந்திக்க முடியவில்லை. விரைவில் எங்களை முதல்வர் அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காணுவார் என எதிர்பார்க்கின்றோம். என கூறினார்.
அரசு ஊழியர்கள் சங்கம் அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்தது. கடந்த காலங்களில் ஒரு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கம் தனது சங்க ஊழியர்களின் நலனுக்காக கட்சி வேறுபாடின்றி குரல் கொடுக்க வேண்டுமே தவிர தி.மு.க என்ற கட்சியின் நிரந்தர ஊழியர் பிரிவாக செயல்படக் கூடாது.
எம்ஜிஆர் காலம் தொட்டு அரசு ஊழியர்கள் சங்கம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவுமே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.
இத்தனைக்கும் அதிமுக அரசு அவர்களது சம்பளத்திலோ சலுகையிலோ ஒரு போதும் கை வைத்ததில்லை.
என்றாலும் நாங்க இல்லாட்டி எந்த அரசும் இயங்காது என்று திமிராகச் செயல்பட்ட அவர்களுக்கு கடந்த 2005-ல் ஜெயலலிதா அவர்கள் ஒரு கசப்பு மருந்து கொடுத்தார் .
அன்றிலிருந்து திமுகவின் அறிவிக்கப்படாத ஒரு துணைப் பிரிவாகவே இவர்கள் செயல்பட்டு வந்தனர்.
இன்றைக்கு இப்படி விடியலில் வந்து முடிந்திருக்கிறது.
சென்ற ஆட்சியில் கரோனாவில் கூட முழு சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்தார்கள் இப்ப நல்ல ஆப்பு வைத்துவிட்டார்கள்.ஆழ்ந்த வாழ்த்துக்கள்.