ஆப்கானிஸ்தானை தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றினர். ஆப்கன் முழுமையாக தலிபான்கள் வசம் வந்துள்ளதை அடுத்து, மக்கள் சாரை சாரை யாக அந்நாட்டினை விட்டு வெளியேறி வரும் காட்சிகள் வந்து கொண்டுள்ளது.
தலிபான்களில் பல குரூப்கள் இருக்கின்றன இதில் மூன்று முக்கியமான குரூப் இருக்கிறது.ஒன்று ஆப்கன் தலிபான்கள்.இரண்டாவது குவெட்டா சூரா மூன்றாவது பாகிஸ்தான் தலிபான் இதன் பெயர் டிடிபி அதாவது டெரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்பதாகும்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் நூழைவாயிலில் , இரண்டு இடங்களில் நேற்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 72 பேர் பலியாகி உள்ளார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
காபூல் விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக, ஆப்கனில் உள்ள அமெரிக்க துாதரகம் எச்சரிக்கை விடுத்தது. காபூல் விமான நிலையத்தின் மூன்று வாயில்களில் இருந்தும் அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி எச்சரித்தது.
பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் காபூல் விமான நிலையம் தாக்கப்பட வாயப்புள்ளதாக எச்சரித்து வந்தனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் 4 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே முதல் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், விமானம் ஏற அமெரிக்கர்கள் காத்திருக்கும் பகுதியான பரோன் ஹோட்டல் கேட் அருகே அடுத்த குண்டு வெடித்தது. இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில், விமான நிலையத்தின் அருகில் மேலும் இரு குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், குழந்தைகள் உட்பட 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன. இதில் 12 அமெரிக்க கடற்படை வீரர்கள் பலியானதாக அமெரிக்க அதிபர் பைடன் உறுதிப்படுத்தி உள்ளார்.
மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் கோரோசான் பிரிவு (ஐ.எஸ்.கே.பி.) பொறுப்பேற்றுள்ளது.