பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக்களிலும் மருத்துவமனை கொண்டுவர முடிவெடுத்து அதற்கான நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 11 புதிய மருத்துவமணிகள் கொண்டுவர முடிவெடுத்து. இந்த திட்டத்தின் முதல் மாவட்டமாக ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள், பிரமாண்டமாக கட்டப்பட உள்ளன. இக்கல்லுாரிகளுக்கு, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு, அரியலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. ஒரே நிதியாண்டில், 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி பெற்றது, தமிழக அரசின் சாதனையாக அமைந்தது. இக்கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு, 2,145 கோடி ரூபாய்; மாநில அரசு, 1,430 கோடி ரூபாய் வழங்க உள்ளன.
இன்று காலை, 10:30 மணியளவில் நடந்த பிரமாண்ட விழாவில், 345 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள, புதிய மருத்துவக் கல்லுாரிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன்,பாஜக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.