அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் ஒரு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள், விமான விபத்துகள் ஏற்படும் என்று பிரபல ஜோதிடர் ஷெல்வி பிப்ரவரி மாதம் எச்சரித்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் நேற்று முன்தினம் மதியம் 1:39 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது
தீப்பிடித்து எரிந்த விமானத்தில் பயணித்த 230 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், பிரபல ஜோதிடர் ஷெல்வி கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அளித்த பேட்டி ஒன்றில், சனி மற்றும் குருப்பெயர்ச்சியில் உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலையும், இயற்கைப் பேரழிவுகளும், விமான விபத்துகளும் ஏற்படும் என்று எச்சரித்திருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஜோதிடர் ஷெல்வி கூறுகையில், சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்படும். ஆனாலும், சில தவறான முடிவுகளை மனிதர்கள் எடுப்பதால் பிரளயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பஞ்ச பூதங்களின் கோபத்தால் இயற்கைப் பேரழிவுகள், கடல் வெள்ளம், மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் ஆபத்துகள், தீ விபத்துகள், விமான விபத்துகள், பேருந்து, ரயில், கப்பல்களில் விபத்து ஏற்படும் என்று கூறியிருந்தார்.
இதேபோல, 2023 ஆம் ஆண்டில் வடமாநிலங்களில் பங்குனி மாதத்தில் நில அதிர்வு ஏற்படும் என்றும் கணித்திருந்தார். அவர் கணித்தபடியே, 2023 இல் பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு விமான விபத்து குறித்து அவர் எச்சரித்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து குறித்த ஷெல்வியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுமட்டுமல்லாமல் கடல் வெள்ளம், இயற்கைப் பேரழிகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ள நிலையில், அவை நடக்குமா என்பது குறித்தும் நெட்டிசன்கள் பலரும் விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்
இதேபோல, 2023 ஆம் ஆண்டில் வடமாநிலங்களில் பங்குனி மாதத்தில் நில அதிர்வு ஏற்படும் என்றும் கணித்திருந்தார். அவர் கணித்தபடியே, 2023 இல் பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு விமான விபத்து குறித்து அவர் எச்சரித்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்து குறித்த ஷெல்வியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியுள்ளதாவது: ”2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்படும். மேலும், விமான விபத்து தொடர்பான தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும். இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன்.
விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது. குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆர்த்ராவின் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது,விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து நடக்கும் என்று கூறிய மேற்கண்ட பதிவை சுட்டிக்காட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே (ஜூன் 5 ஆம் தேதி) மற்றொரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”டாடா நிறுவனம் ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடற்பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே ஆச்சரியப்படுத்தும். கடந்த ஆண்டு நட்சத்திரங்களின் நகர்தல் மூலம் இது கணிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.விமான விபத்து குறித்த இவரின் இந்த எக்ஸ் தளப் பதிவு தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அந்தப் பதிவு குறித்து தங்களின் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.