Friday, June 9, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனே அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியரசு உத்தரவு.

Oredesam by Oredesam
August 8, 2020
in இந்தியா
0
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை உடனே  அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்தியரசு உத்தரவு.
FacebookTwitterWhatsappTelegram

ஊடகங்களுடன் காணொளிக் காட்சி மூலம் இன்று உரையாடிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான், தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் முக்கியமான திட்டங்களான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 1 & 2, தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்துப் பேசினார். ஏழைகள், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் இருக்கும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் வரலாறு காணாத இந்த நெருக்கடியின் போது உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்படக் கூடாது என்னும் எண்ணத்தில், அனைத்து பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் மற்றும்  பொது விநியோகத் திட்ட அட்டை இல்லாதவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எந்த உணவு தானியத் திட்டமும் சென்றடையாதவர்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவற்றை வழங்குவது தான் இந்த மத்திய அரசுத் திட்டங்களின் முக்கியமான நோக்கமாகும். பொருள்கள் அனுப்பப்பட்ட தகவல்கள், எடுத்துச் செல்லப்பட்ட விவரங்கள்,  உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவை பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்திய உணவுக் கழகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் உள்ள இதர நிறுவனங்களைப் பாராட்டிய அவர்,  இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான அளவு உணவு தானியங்கள் இருப்பில் இருப்பதாகக் கூறினார். உணவு தானிய விநியோகப் பணிகளை அடிமட்ட அளவில் அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்றும், உள்ளூர் அளவில் கூட்டங்களை நடத்தி பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் உணவு தானிய விநியோகம் குறித்த எந்தப் புகாரையும் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒரேநாடு, ஒரேகுடும்பஅட்டை

READ ALSO

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

10 ஆண்டுக்கு பின் தந்தையுடன் இணைந்த 13 வயது சிறுவன்.

ஊடகங்களிடம் பேசிய திரு. பஸ்வான், தேசியப் பெயர்வுத்திறன் வசதியில் ஏற்கனவே இணைந்திருந்த 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்திரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1 ஆகஸ்டு, 2020 அன்று இணைந்ததாகத் தெரிவித்தார். தற்போது மொத்தம் 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தில் இணைந்துள்ளன. இதன் காரணமாக, குடும்ப அட்டைகளின் தேசியப் பெயர்வுத்திறன் வசதியின் மூலம், மொத்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் 65 கோடி (80 சதவீதம்) பயனாளிகள் இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெற முடியும். மீதமிருக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் தேசிய பெயர்வுத்திறன் வசதியில் மார்ச் 2021-க்குள் இணைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கிட்டத்தட்ட 2.98 லட்சம் குடும்ப அட்டைகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட திரு பஸ்வான், அவர்களது பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கோண்டார். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடம் இருந்து நேர்மறை பின்னூட்டங்களை உணவு மற்றும் பொது விநியோகத் துறை பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது உணவு தானியப் பங்கை எந்தவித தாமதமும், தடங்கலும் இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒதிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகியவை இந்த 24  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

 தேசியஉணவுப்பாதுகாப்புதிட்டம்:

சுமார் 81 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் (கோதுமை/அரிசி/பச்சை தானியங்கள்) தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் 91 சதவீத நிதிச் சுமையை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவும், வெறும் 9 சதவீத நிதிச் சுமையைத் தான் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இதை அங்கீகரித்து, இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் போது இவை மத்திய அரசு நிதியுதவியுடன் வழங்கப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மொத்தஉணவுதானியஇருப்பு:

உணவு தானிய விநியோகப் பணியைப் பற்றி பேசிய திரு பஸ்வான், வெள்ளத்தின் காரணமாக சில மாநிலங்களில் உணவு தானிய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து ஒரே தவணையில் மாநிலங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இந்திய உணவுக் கழகத்தின் 06.08.2020 தேதியிட்ட அறிக்கையின் படி, 241.47 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 508.72 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் தற்சமயம் இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருப்பதாகக் கூறினார். எனவே, மொத்தமாக 750.19 லட்சம் மெட்ரிக் டன்கள் கையிருப்பில் உள்ளது.  உணவுப் பாதுகாப்புத் திட்டம்,    பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ஒரு மாதத்துக்கு 95 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன.

ஜூலை 2020-இல், 42.39 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 1514 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 191.83 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 6851 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 

ரயில் மார்க்கம் தவிர, சாலை மற்றும் நீர்வழிகளிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 285.07 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், 13.89 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஜூன் 30, 2020 வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 87.62 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், 3.85 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஜூலை, 2020-இல் வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, மொத்தம் 384.83 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், 18.26 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதமரின்ஏழைகள்மறுவாழ்வுஉணவுத்திட்டம்– 1 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 1-இல் தெரிவித்திருந்தவாறு, ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2020 ஆகிய 3 மாதங்களுக்கு, மொத்தம் 119.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்பட்ட நிலையில் (104.3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 15.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை), 101.51  லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 15.01 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. 37.50 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (94 சதவீதம்) 75.0 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் 2020-இல் விநியோகிக்கப்பட்டன. 37.43 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (94 சதவீதம்) 75.0 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் 2020-இல் விநியோகிக்கப்பட்டன.  36.54 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (92 சதவீதம்) 73.0 கோடி பயனாளிகளுக்கு ஜூன் 2020-இல் விநியோகிக்கப்பட்டன (ஜூன் மாதத்துக்கான விநியோகம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது). மூன்று மாதங்களுக்கான மொத்த சராசரி விநியோகம் 93.5 சதவீதம் ஆகும்.

பருப்புகளைப் பொருத்தவரை, மூன்று மாதங்களுக்கான மொத்த தேவை 5.87 லட்சம் மெட்ரிக் டன்கள் என திரு. பஸ்வான் கூறினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 5.83 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் இது வரை அனுப்பி வைக்கப்பட்டு, 5.80 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை அடைந்து விட்டன. 5.23 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புகள் வழங்கப்பட்டும் விட்டன.மூன்று மாதங்களுக்கான மொத்த சராசரி விநியோகம் 90 சதவீதம் ஆகும்.

பிரதமரின்ஏழைகள்மறுவாழ்வுஉணவுத்திட்டம்– 2:

உணவு தானியங்கள் (அரிசி/கோதுமை):

01 ஜூலை, 2020 அன்று தொடங்கிய பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 2, நவம்பர் 2020 வரை தொடரும். இந்தக் காலத்தில், 81 கோடி பயனாளிகளுக்கு மொத்தம் 201 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும். மொத்தம் 201 லட்சம் மெட்ரிக் டன் முழு சென்னா 19.4 கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் 

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 2 பற்றிய பேசிய அமைச்சர் திரு. பஸ்வான், ஜூலையில் இருந்து நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 2-இன் கீழ் மொத்தம் 201.08 லட்சம் மெட்ரிக் டன் (மாதத்துக்கு 40.27 லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானியங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 91.14 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை மற்றும் 109.94  லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியை இது உள்ளடக்கும். மொத்தம் 49.82 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் எடுத்துச் செல்லப்பட்டு, 25.66 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. 24.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (62 சதவீதம்) 49.87 கோடி பயனாளிகளுக்கு ஜூலை 2020-இல் விநியோகிக்கப்பட்டன. 72,711 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (1.8 சதவீதம்) 1.45 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் 2020-இல் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான விநியோகம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது). பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 2-இன் நிதிச்சுமையான சுமார் ரூ 76,062 கோடியை 100 சதவீதம் இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நான்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமையும், 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அரிசியும், மீதமுள்ள 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சென்னா:

சென்னாவை பொருத்தவரை, அடுத்த ஐந்து மாதங்களுக்கான மொத்த தேவை 9.70 லட்சம் மெட்ரிக் டன்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். மொத்தம் 2.10 லட்சம் மெட்ரிக் டன்கள் சென்னா பருப்பு அனுப்பி வைக்கப்பட்டு, 1.56 லட்சம் மெட்ரிக் டன்கள் சென்னா பருப்பு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சென்றடைந்து விட்டன. சுமார் 11,979 மெட்ரிக் டன்கள் சென்னா, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. இந்தத் திட்டத்தின் நிதிச்சுமையான சுமார் ரூ 6849 கோடியை 100 சதவீதம் இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. மொத்தம் 10.01 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் (துவரம்- 5.24 லட்சம் மெட்ரிக் டன்கள், பாசிப் பருப்பு- 1.12 லட்சம் மெட்ரிக் டன்கள், உளுத்தம் பருப்பு- 2.10 லட்சம் மெட்ரிக் டன்கள், சென்னா- 1.27  லட்சம் மெட்ரிக் டன்கள் மற்றும் மைசூர் பருப்பு – 0.27 லட்சம் மெட்ரிக் டன்கள்) கையிருப்பு 06.08.2020-இன் படி உள்ளது. சுமர் 2.72 லட்சம் மெட்ரிக் டன்கள் சென்னா விலை ஆதரவுத் திட்ட (PSS) சேமிப்பிலும், 1.27 லட்சம் மெட்ரிக் டன்கள் சென்னா விலை உறுதிப்படுத்தல் நிதிய (PSF) சேமிப்பிலும் இருக்கிறது.

புலம்பெயர்ந்ததொழிலாளர்களுக்குஉணவுதானியவிநியோகம்: (தற்சார்புபாரதஇயக்கம்)

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அல்லது மாநிலப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத எட்டு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிக்கித் தவிப்போர் மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு எட்டு லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்கள் வழங்க இந்திய அரசு முடிவெடுத்தது. மே மற்றும் ஜூன் மாதங்களில் அனைத்துப் புலம் பெயர்ந்தவர்களுக்கும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்க முடிவெடுக்கப்பட்டது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், 6.39 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்களை எடுத்து சென்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், 2.46 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியங்களை (மே மாதம் 2.42 கோடி மற்றும் ஜூன் மாதம் 2.51 கோடி) பயனாளிகளுக்கு விநியோகித்து விட்டன.

நிர்ணயிக்கப்பட்ட 1.96 கோடி இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 39,000 மெட்ரிக் டன்கள் சென்னாவை வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அல்லது மாநிலப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராத எட்டு கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிக்கித் தவிப்போர் மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்க முடிவெடுக்கப்பட்டது. மாநிலங்களின் தேவைக்கேற்றவாறு பருப்பு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 33,745 மெட்ரிக் டன்கள் சென்னா மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் 33,388 மெட்ரிக் டன்கள் சென்னா எடுத்து செல்லப்பட்டது. மொத்தம் 15,681 மெட்ரிக் டன்கள் சென்னா மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்களுக்கான சுமார் ரூ 3,109 கோடி மற்றும் பருப்புகளுக்கான ரூ 280 கோடி நிதிச் சுமையை 100 சதவீதம் இந்திய அரசு ஏற்கிறது.

உணவுதானியகொள்முதல்:

06.08.2020 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 389.91 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமை (ரபி சந்தைப் பருவம் 2020-21) மற்றும் 752.96 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி (கரிப் சந்தைப் பருவம் 2019- 20) கொள்முதல் செய்யப்பட்டதாக திரு. பஸ்வான் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் பங்களிப்பை தனது முடிவுரையில் பாராட்டிய திரு. பஸ்வான், இந்திய உணவுக் கழகம், மத்திய கிடங்குகள் கழகம், மத்திய ரயிலோரக் கிடங்குகள் கழகம், மாநிலக் கிடங்குகள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பொருள்கள் விநியோகத் துறை/நிறுவனம், அவற்றின் அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களை, இந்த கோவிட்-19 பெருந்தொற்றின் கடினமான காலத்தில் உணவு தானிய விநியோகம் சிறப்பான ஒருங்கிணைப்போடு நடைபெறுவதற்கு உழைத்ததற்காக பாராட்டினார்.

ShareTweetSendShare

Related Posts

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.
இந்தியா

‘கேமிங் ஆப்’ மூலம் மத மாற்றம் இந்தியாவை உலுக்கும் அதிர்ச்சி தகவல்.

June 5, 2023
10 ஆண்டுக்கு பின் தந்தையுடன் இணைந்த 13 வயது சிறுவன்.
இந்தியா

10 ஆண்டுக்கு பின் தந்தையுடன் இணைந்த 13 வயது சிறுவன்.

June 5, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம்: விரைவில் துவங்குது விசாரணை !
இந்தியா

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி விவகாரம்: விரைவில் துவங்குது விசாரணை !

May 17, 2023
உ.பி.,யில் யோகி அரசு அதிரடி ! தாதாக்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்க அதிரடி திட்டம் !
இந்தியா

உ.பி.,யில் யோகி அரசு அதிரடி ! தாதாக்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்க அதிரடி திட்டம் !

May 8, 2023
பிரதமர் மோடிக்கு தலைப்பாகை தயாரித்து தந்த முஸ்லிம்.
இந்தியா

பிரதமர் மோடிக்கு தலைப்பாகை தயாரித்து தந்த முஸ்லிம்.

May 8, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

இந்துக்களை இழிவாக பேசியவர்களை சம்பவம் செய்துள்ளது ருத்ரதாண்டவம்! படம் பார்த்த பெண் நெகிழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

இந்துக்களை இழிவாக பேசியவர்களை சம்பவம் செய்துள்ளது ருத்ரதாண்டவம்! படம் பார்த்த பெண் நெகிழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

October 1, 2021
தமிழக  மீடியாஸ் நவ் : சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பியது இளைஞர்கள் மீன் பிடித்து என்ஜாய்! மீடியாக்களை வச்சு செய்த நெட்டிசன்கள்

தமிழக மீடியாஸ் நவ் : சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பியது இளைஞர்கள் மீன் பிடித்து என்ஜாய்! மீடியாக்களை வச்சு செய்த நெட்டிசன்கள்

November 8, 2021
எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக- வானதி சீனிவாசன் அதிரடி !

“ஸ்டாலின் வெளிநாடு சென்றால் வாழ்த்துபவர்கள், பிரதமரை விமர்சிக்கிறார்கள்!” – வானதி சீனிவாசன் ..

March 28, 2022
தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

தமிழக அரசியல் களத்தை மற்றும் கந்தசஷ்டி கவசம்! கறுப்பர் கூட்டம் மொத்த விவரங்களையும் திரட்டி, அமித் ஷாவிடம் ஒப்படைத்த உளவுத்துறை !

August 3, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
  • சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? திமுகவிற்கு அண்ணாமலை கேள்வி .
  • கூத்தாண்டவர் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தேர்த் திருவிழா.
  • ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x