விநாயகர் சதுர்த்திக்கு தடையை நீக்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நேற்று துவங்கியது
அரசு அனுமதிக்காவிட்டால் தடையை மீறுவோம் என இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள் .கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மாக் முதல் பள்ளி கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுளளது.
இந்த நிலையில் வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாரவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தலைமை வகித்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது பள்ளிகள், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.தினமும் சட்டசபை கூட்டத் தொடரும் நடக்கிறது.
ஆனால், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.புதுச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு, அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கான தடையை விலக்கி, அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல், தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பாரதிய ஜனதா தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 முதல் 12 ம் தேதி வரையில் 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள்.
என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா திமுகவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலின் இந்து விரோத முகத்திரையை கிழிப்போம்என இந்து அமைப்புகள் கூறி வருகிறது.