சென்னை சைதாப்பேட்டையில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்கான கூட்டமைப்பு மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த எ கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். , ”போராட்டக் குழு வைத்த கோரிக்கைகளை, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு, எங்கள் கட்சிக்கு உள்ளது.உங்கள் கோரிக்கைகளை, நானே முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்,” என்றார்.
இந்த நிலையில் மேடையில் இருந்த திருமாவை கீழே இறங்க சொல்லி கூட்டத்தினர் கோஷங்களை எழுப்பினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகளை அனுமதியோம் என கோஷங்கள் எழுப்ப தொடங்கினார்கள்.
உடனே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். திருமாவளவன் அவர்கள் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. எங்கள் உரிமைக்களை மீட்க பொறுப்பாளர்கள் உள்ளார்கள். அவர்கள் பேசுவார்கள். நீங்கள் இங்கு வந்து தங்களின் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. என பேசியதும் திருமா மேடையை விட்டு இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, போராட்டக் குழு நிர்வாகிகள் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிவுகள் வரும் வரை, இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது.
பழைய இட ஒதுக்கீட்டில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதை, ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிபர அடிப்படையில், சமூக நீதி அறிஞர் குழு அமைத்து, சட்டப்படியான வகுப்புவாரி தொகுப்பு இடஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கிய பின், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் ஒதுக்க வேண்டும். இதை, அரசுக்கு 261 சமூகங்களின் கோரிக்கையாக வைக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















