பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையம்’ மூலம் 12,000 இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் ‘இதம்’ திட்டம் நிகழ்ச்சியை, பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.’காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
பிரதமர் மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் புது முயற்சியை எடுத்துள்ளார்.
19 வயதுள்ள வரையிலான இளம் பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைத்தார். இது பெண்கள் மத்தியில் ஓரு புது முயற்சியாக கருதப்படுகிறது. மேலும் ஏழை பெண்கள் இந்த திட்டத்தினை வரவேற்றுள்ளார்கள் இவர் தொடங்கிய இந்த திட்டத்தின் பெயர் இதம்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் இலவச சானிடரி நாப்கின்கள் வாங்கி கொள்ளலாம்.
அக்டோபர் 7 ஆம் தேதி வரை மகளிரணி சார்பில், நாடுதோறும் மகளிர் நலத்தை பாதுகாப்பதற்காக, பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு வழங்குதல், பரிசோதனை முகாம் நடத்துதல், ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் முதல் நிகழ்ச்சியாக, 12 ஆயிரம் இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தொய்வின்றி, சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். கூறியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் பெண்கள் முன்னேற்றத்தில் வெறும் பேச்சுக்களால மட்டுமல்லாமல் களத்தில் இறங்கி பெண்களின் தேவையறிந்து அனைத்து உதவிகளையும் செய்வதில் முன்னுதரணமாக திகழ்கிறார் வானதி சீனிவாசன் அவர்கள்.
அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்காக மோடியின் மகள் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு க படிப்பிற்கான செலவினை ஏற்றுள்ளார்.
கோவை பகுதியில் பெண்களுக்கான கோலப்போட்டி, ஃபேஷன் ஷோ ,குழந்தைகள் நலத்திட்டம் ,கடை வைத்துள்ள பெண்களுக்கு நிவாரண உதவி கடனுதவி உள்ளிட்ட பல பணிகளை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்து வருகின்றார்.