கலைஞர் (பொய்) செய்திகள் மீது போலீஸில் புகார் குஜராத் முந்த்ரா port ரூ 21000 கோடி ஹெராயின் பறிமுதல்-மோடியின் தயவுடன் கடத்தலாம் ! இவர்களை என்ன செய்யலாம்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கலைஞர் செய்திகள் என்கின்ற தொலைக்காட்சியில் ட்விட்டர் பக்கத்தில் அதானியின் துறைமுகத்தில் ரூபாய் 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் பாரத பிரதமர் மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்? என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருந்தது. (போட்டோ நகல் இணைப்பு) இந்த பதிவு உண்மைக்குப் புறம்பானது அவதூறானது பாரத பிரதமர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு புனையப்பட்ட செய்தியாகும். மேற்கண்ட ட்விட்டர் பதிவில் எந்த உண்மையோ, ஆதாரமோ இல்லை என்பதை தெரிந்தே மேற்கண்ட தொலைக்காட்சியினர் பிரதமருடைய புகழுக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு தவறான எண்ணத்தில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக
moneycontrol.com என்கின்ற டிஜிட்டல் பத்திரிகையில் வந்திருக்கின்ற செய்தியின் சுருக்கத்தை இங்கு தருகிறேன்.
செப்டம்பர் 13-ஆம் தேதி சந்தேகத்திற்குரிய இரண்டு கன்டெய்னர்களை DRI துறையினர் பறிமுதல் செய்து சோதனை நடத்தியதில் 2998 கிலோ
ஹெராயின் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. மேற்கண்ட விசாரணையில் டெல்லி, விஜயவாடா,சென்னை நகரங்களில் விசாரிக்கப்பட்டு, மேலும் 10 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்படுகிறது.
1.இதில் சம்பந்தப்பட்ட 8 பேர் ( 4 பேர் ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான் ,3 இந்தியர் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூட குறிப்பாக யார் மீதும் குற்றம் சாட்டாமல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ள நிலையில் மேற்படி தொலைக்காட்சியில் உள்நோக்கத்தோடு பிரதமர் மீது அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்தி வெளியிட்டிருக்கிறது தெளிவாக
தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதானி என்பவருக்கு சொந்தமான முந்தரா துறைமுகத்தின் பாதுகாப்பு சோதனைகள் அனைத்தும் எங்களுடைய
கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்று விளக்கம் அளித்த பிறகும் கூட,இதிலே பிரதமருக்கு தொடர்பு இருக்கிறது என்று தொலைக்காட்சியில்
வெளியிட்டிருக்கிறது. எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கலைஞர் (பொய்) செய்தி தொலைக்காட்சி மீது online police Complaint கொடுத்துள்ளேன்.ரூ 21000 கோடி ஹெராயின் கடத்தலுக்கு மோடி உதவியாம்பிரதமர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் இவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தரவேண்டும். இனி பொய்யர்கள் ஜெயிலே கதி என கிடக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில பொருளாளர் SR.சேகர் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















