கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு.ஹெச். ராஜா அவர்கள் ஊடகங்களை விமர்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அதற்கு சில பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது எங்களுக்கு ஏற்புடையது அல்ல, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு ஹெச்.ராஜா அவர்கள் தேசத்திற்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகங்களை மட்டுமே அவ்வாறு பேசி இருந்தாரே தவிர தேசிய சிந்தனையுள்ள நாட்டுப்பற்றுள்ள ஊடகங்கள் குறித்து அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை. ஆகவே அவருடைய அந்த விமர்சனங்களை எமது தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் வரவேற்கிறது
திமுகவைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் ஊடகங்களை ரெட்லைட் மீடியா என்று தகாத வார்த்தைகளால் பேசும்போது எந்த பத்திரிகையாளர் சங்கங்களும் கடித கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி தற்போது எழுகிறது.
தேச விரோதமாக செயல்படுகின்ற ஊடகங்களுக்கு தான் இதுபோன்ற இரண்டு நிலைப்பாடு இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை.
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்களின் தேசவிரோத இந்து விரோத ஊடகங்கள் பற்றிய கருத்து எமது சங்கம் முழுமனதோடு ஏற்கிறது
ஜெய்ஹிந்த்!
என தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க மாநில IT பிரிவு ஒருங்கிணைப்பாளர் வினோத்அமர்சிங் தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















