மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் தி.மு.கவின் இரட்டை வேடத்தை ஆதாரத்துடன் தோலுரித்த அண்ணாமலை !
மதுரவாயல் – துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என நிதின் கட்கரி அறிவித்தபோது அப்போது எதிர் கட்சியாக இருந்த திமுக எதிர்த்தது.தற்போது ஆளுங்கட்சியாக வந்தவுடன் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது. திமுகவின் இரட்டை நிலைப்பாட்டினை அண்ணாமலை ஆதாரத்துடன் வெளியிட்டுளளார்.
நேற்றைய தினம் மதுரவாயல் – துறைமுகம் இடையே அமைக்கவுள்ள பறக்கும் சாலையை இரண்டு அடுக்காக கட்டவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் வெளியிட்ட செய்தியில்,
“மதுரவாயல் – துறைமுகம் இடையே இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமைப்பதற்கான சாலை திட்டம் அமையவுள்ளது. எந்த இடத்தில் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் விரிவான திட்டறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை துறைமுகம் – மதுரவாயில் இடையே ரூ.5000 கோடி செலவில் 6 வழிசாலையுடன் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ரூ3100 கோடியில் இருந்து தற்போது இந்த திட்டம் 5000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் தொகைக்காக மாநில அரசின் சார்பில் ரூ.400 முதல் ரூ.500 கோடியும், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மீதித்தொகையான ரூ.1000 கோடி கொடுக்கப்படும் என நிதின்கட்காரி தெரிவித்தார்.
இது குறித்து அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் அந்த அறிக்கையில் சென்னை மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவோம் என அறிவித்திருப்பது, அதன் கட்டுமானத்தைக் குலைத்து, அபரிமிதமான காலதாமதத்தை ஏற்படுத்தும், போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்” என ஈரடுக்கு மேம்பாலம் திட்டத்தினை எதிர்த்தார்.
ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரவாயல் – துறைமுகம் இடையே அமைக்கவுள்ள பறக்கும் சாலையை இரண்டு அடுக்காக கட்டவுள்ளதாக திமுக அரசாங்கம் கூறியுள்ளது. இதனை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அன்றும் இன்றும் என திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரல் ஆகி வருகின்றது.