தமிழகத்தில்வைக்கப்பட்ட பேனர்…உளவுத்துறை போட்ட பக்க ஸ்கெட்ச்… சிக்கப்போகும் முக்கிய தலைகள்…

nia team

nia team

மேற்காசிய நாடான இஸ்ரேல், அதன் அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது.இதன் உச்சகட்டமாக, 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இது, ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து, இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்தது. இதில், ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சில் துணைத் தலைவரான நாபில் காவோக் கொல்லப்பட்டார்.
முன்னதாக ஹசன் நஸ்ரல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, ஹிஸ்புல்லாவின் மற்றொரு முக்கிய தலைவரான அலி கராக்கியும் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா உறுதி செய்துள்ளது.

இதனால் கட்டுப்படைந்த ஈரான் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்குவோம் என அறிவித்திருப்பதால் மீண்டும் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது

இதற்கிடையே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் போட்டு தள்ளியதுதான் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என ஈரான் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், லெபனான் நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவனான ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மிர்சாகிப் பேட்டை பள்ளிவாசல் முன்பு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகத்தின் எந்த நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக
தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் பயங்கரவாதிகள் கொல்லப்படும் போது அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குரல் தமிழகத்திற்கு நல்லதல்ல என்றும், 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது சென்னையில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஒரு படி மேலே சென்று, பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ருல்லாவிற்கு போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசியது பெரும் விவாதத்தை தொடங்கியுள்ளது. அனைத்து மதத்தினரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா ? என பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

“மண்டியிட்டு வாழ்வதை விட சத்தியத்திற்காக நிமிர்ந்து நின்று மடிவது மேல்” என்ற வாசகங்களுடன் இறந்து போன பயங்கரவாதிக்கு சென்னையில் பேனர் வைத்தவர்கள் யார் ? அவர்களது பின்னணி என்ன என்பதைப் பற்றியும் முழுமையாக தமிழக அரசும் உளவுத்துறையும் விசாரிக்க வேண்டும் .அவர்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கியுள்ளன.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காஷ்மீரில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முக்தி நஸ்ரல்லா மற்றைய உயிர் தியாகிகளோடு இணைந்துள்ளார் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு – காஷ்மீர் இரு இடத்திலும் நடக்கும் ஒரே மாதிரியான இந்த பேட்டர்ன், நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என பல அரசியல் நோக்கர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னொரு காஷ்மீராக தமிழகத்தை மாற்ற அடிப்படைவாத சக்திக்கள் தொடர்ந்து முயல்வதாகவும், தமிழக மற்றும் இந்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறப்படுகிறது.மேலும் உளவுத்துறை அமைப்புகள் தற்போது தமிழகத்தை நோட்டமிட்டு வருகிறார்கள். மேலும் பயங்கரவாதத்துக்கு உதவும் தலைவர்களையும் தீவிரமாக கண்காணிப்புகள் கொண்டு வந்துள்ளது. மேலும் நேரம் வரும்போதுஅனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் பரவியுள்ளது..

Exit mobile version