போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?
ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி கோரியுள்ளார்.
மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல்.
இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகாரளித்தார்.
நீதிமன்றப் பதிவாளர் ஹர்திக் தேசாய் அளித்த புகாரின் அடிப்படையில், மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் மீது ஐ.பி.சி பிரிவு 171 (அரசு அதிகாரி பதவியில் இருப்பதுபோல காட்டிக்கொள்ளுதல்) மற்றும் பிரிவு 419 (ஆள் மாறாட்டம்) ஆகிய சட்டங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின.
மேலும் விசாரணையில்,மோரிஸ் சாமுவேலின் நடவடிக்கைகள் உண்மை எனத் தோன்ற வைப்பதற்காக அவரது கூட்டாளிகளே வழக்கறிஞர்களாகவும், நீதிமன்ற ஊழியர்கள் போலவும் செயல்பட்டுள்ளனர்.
இப்படி நூதனமான நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்றிவந்த மோரிஸ் இறுதியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் கூடுதல் விசாரணையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.