இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ கோர்ட் முடித்து வைத்துள்ளது.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் வஉசி நகர் உள்ளது. இங்கு பழமை வாய்ப்பு செல்வ சுந்தர விநாயகர் கோவில் இருந்தது. பொதுமக்கள் இந்த கோவிலில் தரிசனம் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் தான் திடீரென்று அந்த கோவில் மாயமானது. அதாவது தமிழக அரசால் கோவில் இடிக்கப்பட்டது இதையடுத்து செல்வ சுந்தர விநாயகர் கோவில் அகற்றப்பட்டு அந்த இடத்தில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே தான் விநாயகர் கோவிலை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் வ.உ.சி. நகரில் அமைந்திருந்த செல்வ சுந்தர விநாயகர் கோவிலை காணவில்லை எனவும், நூறாண்டு பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு, அங்கு மாநகராட்சி, குப்பை தொட்டிகளை வைத்துள்ளதாக கூறி சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், கோவில் அமைந்திருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டது. அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.