விதிகளை மீறிய ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தி தரமான சம்பவம் செய்த காவல்துறை !
கடந்த மாதம் 30 ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ராஜ் பகதூர் ஹில்ஸில் நடந்தது.இந்நிலையில் இசை நிகழ்ச்சியை நடத்தியது போதும் என மகாராஷ்டிரா மாநில காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைப்பதில்லை என்பதால் வேறு மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி சம்பாதித்து வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். இந்த நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த இசைநிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் பாடிக்கொண்டிருந்த போதே அனுமதி வாங்கிய நேரம் முடிந்து விட்டது பாடுவதை நிறுத்திவிடுங்கள் என கூறியுள்ளார்கள். இதனை கேட்ட ஏ.ஆர். ரஹ்மான் உடனே பாடுவதை நிறுத்தினார்.
இது குறித்து டிசிபி ஸ்மார்தனா பாட்டில் கூறியதாவது,
இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி இல்லை. இந்நிலையில் 10 மணியை தாண்டி ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார். அவர் தன் கடைசி பாடலை பாடினார். அப்படி பாடியபோது 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதை அவர் உணரவில்லை. அதனால் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த போலீசார் மேடைக்கு சென்று ரஹ்மானிடம் பேசினார்கள். இதையடுத்து அவர் பாடுவதை நிறுத்திவிட்டார் என்றார்.
வேறு மாநிலங்களுக்கு எல்லாம் சென்று இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். சென்னை என்கிற ஒரு ஊர் இருப்பதை மறுந்துவிட்டீர்களா சார். தயவு செய்து சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துங்கள் என ரசிகர்கள், ரசிகைகள் ட்விட்டரில் கோரிக்கை விடுத்தனர்.
அதை பார்த்த ரஹ்மானோ, அனுமதி, அனுமதி, அனுமதி, அனுமதி பெற 6 மாத காலமாகிறது என தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















