இந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரியின் மகன் – ஆ.ராசா திமிர் பேச்சு!

ஹிந்துக்களாக இருப்பவர்கள் எல்லாம் விபச்சாரியின் மகன் என தி.மு.க. எம்.பி. ஆ. ராசா பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் ஆ.ராசா. இவர், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். இதுதவிர, தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாக இவரது கருத்துக்கள் அமைந்து இருக்கும். அந்த வகையில், தி.மு.க.வின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார்;

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என்று பேசி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், ஆ.ராசா கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஹிந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். ஹிந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என ஆ. ராசா பேசியிருக்கிறார்.

ஹிந்துக்களின் மீது தொடர்ந்து வன்மத்தை காட்டும் இவர், மாற்று மதங்கள் குறித்து இவ்வாறு பேச முடியுமா? அல்லது ஹிந்துக்களின் ஓட்டுக்கள் தி.மு.க.விற்கு வேண்டாம் என இவரால் கூற முடியுமா? தி.மு.க. தலைமை தொடர்ந்து இவரை பேச அனுமதிப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் ஆ.ராசாவின் கருத்தை ஆதரிக்கிறாரா? என நெட்டிசன்கள் தி.மு.க.வை மிக கடுமையாக சாடி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version